Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயிர் காக்கும் தலைக்கவசம்

உயிர் காக்கும் தலைக்கவசம்

            – இது ஏதோ வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் அல்ல. தலை உடைந்து உயிரிழந்து போனவர்களின் எண்ணிக்கை. கேட்கவே இதயம் நடுங்குகிறதல்லவா? இன்றைய காலகட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டன.

            நாளுக்கு நாள் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடியே 55 லட்சத்தை தாண்டிவிட்டது.
சென்னை போன்ற பெருநகரங்களில் லட்சக்கணக்கில் இருசக்கர வாகனங்கள் சாலைகளில் ஓடு (பறக்)கின்றன. இவற்றிற்கிடையே வாகனங்களை பத்திரமாக ஓட்டி செல்வது திகில் நிறைந்த அனுபவமாகவே இருக்கிறது.

பத்திரமாக ஓட்டி சென்றாலும் மின்னல் வேகத்தில் பறந்து வருபவர்கள் நம்மீது உரசினால் போதும்... சாலையில் வீசி எறியப்படுகிறோம்.

விழுந்த வேகத்தில் உடலெல்லாம் கீறல் விழுந்தால் பரவாயில்லை. வெட்டி, ஒட்டி கிட்டி சரிப்படுத்தி விடலாம். ஆனால் தலையில் கீறல் விழுந்தால்... உயிரை இழப்பதை தவிர வேறு வழியில்லை.

எனவே தான் "தலைக்கவசம் உயிர் கவசம்" ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டுங்கள் என்று கத்தி கத்தி சொல்லி பார்க்கிறார்கள். ஆனால் செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கு போல் அதை யாரும் கேட்பதும் இல்லை. கண்டு கொள்வதும் இல்லை.

இப்போது சாட்டையை கோர்ட்டு கையில் எடுத்து விட்டது. ஜூலை 1–ந்தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம். தவறும் பட்சத்தில் லைலென்சு பறிக்கப்படும் என்ற அதிரடி உத்தரவை சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது.

இனி யாரும் ஜகா வாங்க முடியாது. தலை கவசத்தோடு தான் இருசக்கர வாகனங்களை ஒட்டி செல்ல முடியும். கண்காணிக்கும் காவல்துறையும் கண்டிப்புடன் நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்.

கோர்ட்டு போட்ட கிடுக்கிப்பிடி ஒரு புறம் இருக்க, இன்னொரு புறத்தில் 90 டிகிரி நேர் பார்வைக்காகத்தான் ஹெல்மெட் வடிவமைக்கப்படுகிறது. பக்கவாட்டில் பார்க்கும் வசதியோடு அவை வடிவமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதை வழக்கில் வாதாடிய மத்திய அரசும் ஒத்துக்கொண்டது.

100–க்கும் மேற்பட்ட ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற ஹெல்மெட் தயாரிப்புகள் உள்ளன. தரமான ஹெல்மெட் ரூ. 700 முதல் ரூ. 1000 வரை விற்கப்படுகிறது.

90 டிகிரி நேர்பார்வை மட்டும் தான் பார்க்கமுடியும் என்பதை ஹெல்மெட் தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. பக்கவாட்டிலம் பார்க்க முடியும். பக்கவாட்டு கண்ணாடிகளை கவனித்து வண்டியை ஓட்டும்போது எந்த சிரமமும் ஏற்படாது.

தலையில் வியர்வை வருகிறது என்பது உண்மைதான். நாம் எப்போதும் ஹெல்மெட் அணிந்து கொண்டே இருப்பதில்லை. வாகனத்தை விட்டு இறங்கும் போது சிறிது நேரம் ஹெல்மெட் கழட்டி "ரிலாக்ஸ்" ஆக இருந்து கொள்ளலாம்.

கடமைக்காக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நினைப்பை கைவிட வேண்டும். தலைக்கு ஏற்றாற்போல் தரமான ஹெல்மெட்களை தேர்வு செய்து வாங்க வேண்டும்.

அணியும் போதும் தாடை பெல்டை மாட்டிக்கொள்ள வேண்டும். அப்படியானால்தான் விபத்துக்களில் சிக்கும் போது ஹெல்மெட் கழன்று விடாமல் இருக்கும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

ஹெல்மெட் விற்பனையாளர் ரயான் பஷீர் கூறியதாவது:–

ஹெல்மெட் போடாமலே பழகியதால் முதலில் போடும் போது ஒரு மாதிரியாக தெரியும். ஹெல்மெட் அணிந்தால் நேர்பார்வைதான் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது. ஹெல்மெட் அணிந்தால் பக்கவாட்டு கண்ணாடியை பார்த்துதான் வண்டியை ஓட்ட முடியும். பல வண்டிகளில் பக்கவாட்டு கண்ணாடி இல்லை. முதலில் அதை கட்டாயமாக்க வேண்டும்.

மார்க்கெட்டில் டெல்லி தயாரிப்பு ஹெல்மெட்கள் ரூ. 200 முதல் கிடைக்கிறது. விலை குறைவு என்பதால் அதை வாங்கி பிரயோஜனம் இல்லை. சென்னையில் ஸ்டட், ஏரோஸ்டர், விராங்க்ளர், வேகா ஆகிய முன்னணி ஹெல்மெட் தயாரிப்பு கம்பெனிகள் உள்ளன.

ஸ்டட் – ரூ. 700 முதல் 2 ஆயிரம் வரை உள்ளது. வேகா – ரூ. 450 முதல் 1500 வரை ஏரோஸ்டர் – ரூ. 350 முதல் 1000 வரை உள்ளது. விராங்களர் – ரூ. 490 முதல் 1500 வரை உள்ளது.

ஹெல்மெட்டில் அழகு, கவர்ச்சியை எதிர்பார்க்கக்கூடாது. பாதுகாப்புக்குத் தான் அணிகிறோம். அதில் ஸ்டைலை பார்த்தால் பாதுகாப்பானதாக இருக்காது.

அண்ணன் ஹெல்மெட்டை தம்பி போடுவது... அப்பா ஹெல்மெட்டை போடுவது என்று குடும்பத்தில் ஒருவர் இன்னொருவர் ஹெல்மெட்டை அணிவதும் சரியல்ல. தலைக்கு பொருத்தமாக இருக்காது. இதனாலும் ஹெல்மெட் அணிவதால் தலைவலி வரும். அவரவர் தலைக்கு பொருத்தமாக வாங்கி அணிய வேண்டும்.

ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாததை வாங்குவதும் கூடாது. பெரும்பாலும் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி அணிய வேண்டும். இதன் மூலம் ஹெல்மெட் அணிந்தும் தலையில் அடிபட்டால் கம்பெனி மீது வழக்கு தொடர முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹெல்மெட் அணிந்தால் முடி உதிர்ந்து விடும் என்ற ஐயமும் பலரிடம் உள்ளது. அதற்கு காரணம், ஹெல்மெட்டின் உயர் பகுதியில் தெர்மாகோல் உள்ளது. உள்ளே சரியான காற்று கிடைக்காது எனவே தலையில் வியர்க்கிறது.

இதனால் முடி கொட்டுதல் ஏற்படும். இதை தவிர்க்க தலையில் கர்சீப் அல்லது மெல்லிய துணியாலான தொப்பியை வைத்துக்கொண்டு ஹெல்மெட்டை அணிந்தால் இந்த பிரச்சனை வராது.

மரணம் எல்லோருக்கும் நிச்சயிக்கப்பட்டது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும் என்பார்கள். எதிர்பாராமல் தலைக்கு வரும் ஆபத்து ஹெல்மெட்டால் தவிர்க்கப்படும். எனவே அநியாயமாக தலையில் அடிபட்டு உயிரை இழப்பதை தவிர்க்கலாமே.
வந்த பின் காப்பது கஷ்டம். வருமுன் காப்பதே விவேகம்.




10 Comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. என்னுடன் பணி புரிந்த அன்பு நண்பரை இழந்த அவரது குடும்பத்தினரின் வலி புரிந்து கொண்ட பின்னரே தலை கவசம் ( ஸ்டட் ஆர் பி 2 ) வாங்கினேன் .. .
    இது நாள் வரை மூன்று விபத்துகள் ...
    அனைத்திலும் எனது தலை கவசத்தின் மீதான தாக்குதல்கள் ....
    நான் இன்று உயிரோடு வாழ காரணம் மறக்கவே முடியா நண்பரின் மரணம் & எனது தலைகவசம்.

    தலைக்கவசம் அணிந்தால் முடி கொட்டும் என கூறும் நண்பர்களே ..
    உங்கள் உயிர் பெரிதா
    அல்லது
    உங்கள் தலை ம## பெரிதா ?????
    எனது பதிவை பார்த்து யாராவது ஒரு நண்பர் தலைக்கவசம் வாங்கினால் அது என்னை விட அவரது குடும்பத்தாருக்கு மகிழ்ச்சி ....

    ரோடுல நிறைய இடியட்ஸ் இருக்காங்க. ..
    உயிர் காக்க தலைக்கவசம் அணிவோம்,வாழ்வோம்

    ReplyDelete
  7. என்னுடன் பணி புரிந்த அன்பு நண்பரை இழந்த அவரது குடும்பத்தினரின் வலி புரிந்து கொண்ட பின்னரே தலை கவசம் ( ஸ்டட் ஆர் பி 2 ) வாங்கினேன் .. .
    இது நாள் வரை மூன்று விபத்துகள் ...
    அனைத்திலும் எனது தலை கவசத்தின் மீதான தாக்குதல்கள் ....
    நான் இன்று உயிரோடு வாழ காரணம் மறக்கவே முடியா நண்பரின் மரணம் & எனது தலைகவசம்.

    தலைக்கவசம் அணிந்தால் முடி கொட்டும் என கூறும் நண்பர்களே ..
    உங்கள் உயிர் பெரிதா
    அல்லது
    உங்கள் தலை ம## பெரிதா ?????
    எனது பதிவை பார்த்து யாராவது ஒரு நண்பர் தலைக்கவசம் வாங்கினால் அது என்னை விட அவரது குடும்பத்தாருக்கு மகிழ்ச்சி ....

    ரோடுல நிறைய இடியட்ஸ் இருக்காங்க. ..
    உயிர் காக்க தலைக்கவசம் அணிவோம்,வாழ்வோம்

    ReplyDelete
  8. Important... Good habit...necessary...

    ReplyDelete
  9. Important... Good habit...necessary...

    ReplyDelete
  10. We should welcome this High court order..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive