தமிழகத்தில், முப்பருவக்கல்வி முறை
அறிமுகப்படுத்தப்பட்ட பின், எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் கல்வி
முறையில், தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதை போக்கும் வகையில், புதிய வழிமுறைகளை
பின்பற்ற, ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அலுவலர்களுக்கும், தொடக்கக்கல்வி
இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்
சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம்
வகுப்பு வரை, செயல்வழிக்கற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதில்,
பாடங்கள் அனைத்தும், வண்ண அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டு, மாணவர்களின்
கற்றல் திறனுக்கேற்ப,கற்றுக்கொள்ளும் வகையில், வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதனால், வகுப்பறையில், புத்தகங்களை கொண்டு,
பாடம் நடத்தும் முறை தடை செய்யப்பட்டிருந்தது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த
பின், மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், ஒன்றாம் வகுப்பு
முதல், 9ம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை கொண்டு வரப்பட்டது.இதில்,
புதிய பாடப்புத்தகம் வழங்கிய நிலையில், வண்ண அட்டையில் பாடம் நடத்துவது
குறித்த, தெளிவான வழிமுறைகள் வழங்கப்படவில்லை. இதனால், பெரும்பாலான
பள்ளிகளில், செயல்வழிக்கற்றல் முறையை கைவிட்டு, பாடப்புத்தகங்களை கொண்டு,
பாடம் நடத்த துவங்கினர்.
இதனால், செயல்வழிக்கற்றல் முறையில் தொய்வு
ஏற்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், செயல்வழிக்கற்றல் முறையில்,
பின்பற்ற வேண்டிய புதிய வழிமுறைகள் குறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர்,
அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது:தொடக்கக்கல்வி
துறையில், முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்பட்ட பின், செயல்வழிக்கற்றலில்
தொய்வு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதை போக்க, புதிய வழிமுறைகள்
வகுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி அனைத்து பள்ளிகளும், ஒன்று முதல்
நான்காம் வகுப்பு வரை, எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் முறையை புதிய
வழிமுறைகளின்படி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இதன்படி நடத்தப்படுகிறதா என்பதை, உதவி
தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உள்ளிட்டோர், ஆய்வு
செய்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன பிரச்னை?இது குறித்து நகரமைப்பு
வல்லுனர்கள் கூறியதாவது: வெளிப்படையாக பார்த்தால், கடலோர பகுதி களில் அதிக
அளவில் அடுக்குமாடி கட்டடங்கள் வருவதற்கு இந்த திருத்தம் உதவும். ஆனால்,
எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீடு அடிப்படையில், இதன் பயன்
மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத்
மாநிலங்களில் பொதுவாகவே தளபரப்பு குறியீடு அதிகமாக அனுமதிக்கப்படுவதால்
அவர்களுக்கு இத்திருத்தம் பயன்தரும். தமிழகத்தில் பொதுவாக
அனுமதிக்கப்படும் தளபரப்பு குறியீடு மிகவும் குறைவாக இருப்பதால்,
இத்திருத்தத்தின் அடிப்படையில் அதிக பட்சமாக, ஐந்து மாடிக்கு மேல்
அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல் உள்ளது.இவ்வாறு அவர்கள்
கூறினர்.-
Muzhuka adhigaarigal poruppu.....ABL waste eandru kooriyabodhu adhigaarigal keatkavillai...... Thalaimuraiyai pazhaaki vittargal....aadhigaarigal avargalai. ABL. Palliyil searka chollungal...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteABL method ல் எந்த குறையும் இல்லை. ஆனால் அதை செயல் படுத்துபவர்களுக்கு மரியாதை இல்லை.
ReplyDelete