திருப்பதி,
பாலக்காடு ஆகிய இடங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஐஐடி-க்களில் தலா 4
துறைகளின் கீழ் மொத்தம் 120 இடங்களுக்கு, 2015-16 கல்வியாண்டில் மாணவர்
சேர்க்கை நடத்தப்பட உள்ளது என சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி
கூறினார்.
கடந்த
2014 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த
இரு ஐஐடி-க்களில் வருகிற ஆகஸ்ட் முதல் வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்த ஐஐடி-க்களுக்கு அடுத்த 6 முதல் 10 மாதங்களில் புதிய இயக்குநர் நியமிக்கப்பட உள்ளார்.
அதுவரை அவற்றுக்கான வழிகாட்டி இயக்குநராக சென்னை ஐஐடி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பாஸ்கர் ராமமூர்த்தி கூறியதாவது:
இந்தப் புதிய ஐஐடி-க்களுக்கு இயக்குநர்கள் நியமிக்கப்படுகிற வரை, சென்னை ஐஐடி-தான் அவற்றை வழிநடத்தும்.
அதுவரை திருப்பதி ஐஐடி-க்கு பொறுப்பு பேராசிரியராக கே.என். சத்தியநாராயணாவும், பாலக்காடு ஐஐடி-க்கு பொறுப்பு பேராசிரியராக பி.பி.சுனில் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரு ஐஐடி-க்களிலும் சிவில், கணினி அறிவியல், மின்னியல், இயந்திரவியல் ஆகிய 4 பி.டெக். துறைகளின் கீழ் தலா 30 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
முதல் 4 ஆண்டுகளுக்கு, அதாவது முதல் பிரிவு மாணவர்கள் படிப்பை முடிக்கும் வரை தாற்காலிக கட்டடத்தில் இயங்க உள்ள இந்த ஐஐடி-க்கள், அதற்குள் அந்தந்த மாநில அரசுகள் சார்பில் ஒதுக்கித் தரப்படும் 500 ஏக்கர் நிலத்தில் நிரந்தர வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டு மாற்றப்பட்டு விடும்.
இதுபோல் வகுப்புகளை நடத்த சென்னை ஐஐடி-யிலிருந்து ஓய்வுபெற்ற தலைசிறந்த பேராசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான குடியிருப்புகள், மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள் ஆகியவையும் தயார் நிலையில் உள்ளன.
எனவே, மாணவர்கள் வியாழக்கிழமை (ஜூன் 25) முதல் ஐஐடி-யில் சேருவதற்காக ஆன்-லைனில் படிவங்களை நிரப்பும்போது பாலக்காடு ஐஐடி, திருப்பதி ஐஐடி-க்களையும் விருப்பமாகத் தேர்வு செய்யலாம். இந்த இரு ஐஐடி-க்களிலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும் என்றார் அவர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...