தமிழ்வழி மாணவர்களுக்கே பொதுத் தேர்வில் மாநில
முன்னிலை இடங்களுக்கான பரிசு மற்றும் மருத்துவம், பொறியியல் படிப்பில்
முன்னுரிமை தர வேண்டும் என, அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர்கள்
வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, தமிழகத் தமிழாசிரியர் கழக பொதுச் செயலர்
இளங்கோ வெளியிட்ட அறிக்கை:
இளைஞர்களுக்கு உயர்கல்வி மட்டுமின்றி, அனைத்து வித கல்வியையும் தாய்மொழியில் தான் வழங்க வேண்டும் என்று, காந்தியடிகள் தெரிவித்தார்.
அண்மையில் வெளிவந்த 10ம் வகுப்பு பொதுத்
தேர்வில், 773 பேர் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். இதில்,
23 பேர் மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்கள். தமிழகத்தில் மேல்நிலைப்
பள்ளிகள் உருவாகும் வரை, அனைவரும் தமிழ் வழியில் தான் படித்தனர். பின்,
பி.யூ.சி., வகுப்பில், கல்லுாரி நுழைவு வகுப்பில் சேரும்போது, ஆங்கிலம்
படிக்கத் திணறினர். ஆனால், முதல் மூன்று மாதங்களுக்கு பின், ஆங்கிலத்தில்
வென்று, தற்போது புலமை பெற்று
உள்ளனர்.
ஜப்பான், ரஷ்யா, சீனா மற்றும் கொரியா போன்ற
நாடுகள் கல்லுாரிகளில், வெளிநாட்டு மாணவர்களுக்காக, முதல் ஆறு மாதங்கள்
சம்பந்தப்பட்ட பாடங்களுக்கு அடிப்படை மொழிப் பயிற்சி தந்து, ஆங்கிலப் புலமை
பெற வைக்கின்றனர். இந்த முறையை தமிழகத்திலும் அமல்படுத்தலாம்.எனவே,
ஆங்கிலத்தை, கல்லுாரிகளில், ஆறு மாதங்களில் பயிற்சி தரும் திட்டம் கொண்டு
வரவேண்டும். அதற்கு முன், பள்ளிக்கல்வியைத் தமிழிலேயே தர வேண்டும்.
கர்நாடக அரசு தன் மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பது போல், தமிழகமும் இருக்க வேண்டும்.
தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கே, மாநில
அளவில் இடங்கள் மற்றும் அரசின் பாராட்டு, பரிசு வழங்க வேண்டும். தமிழ் வழி
மாணவர்களுக்கு மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளிலும், வேலைவாய்ப்பிலும்,
80 சத முன்னுரிமை தர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...