இன்ஜி., மற்றும் பி.டெக்., படிப்பில், எந்த
பல்கலைக்கும் திறந்தவெளி மற்றும், 'ஆன் - லைன்' கல்லுாரி நடத்த
அனுமதிக்கவில்லை என்று, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,
அறிவித்துள்ளது. போலி விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றக் கூடாது என்றும்
எச்சரித்து உள்ளது.
பல கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், பி.இ.,
மற்றும் பி.டெக்., படிப்புகளை, தொலைதுாரக் கல்வியில் கற்றுத் தருவதாகவும்,
சில நிறுவனங்கள், 'ஆன் - லைனில்', கற்றுத் தருவதாகவும்
விளம்பரப்படுத்துவதாக, யு.ஜி.சி.,க்கு புகார்கள் வந்துள்ளன.
இதை விசாரித்து, போலி கல்லுாரி மற்றும்
பல்கலைகளில் சேர வேண்டாம் என்றும், போலி விளம்பரங்கள் மூலம், மக்களை ஏமாற்ற
வேண்டாம் என்றும், யு.ஜி.சி., எச்சரித்து உள்ளது.யு.ஜி.சி., வெளியிட்டு
உள்ள எச்சரிக்கை:மாநிலங்களில் செயல்படும், அரசு மற்றும் தனியார்
பல்கலைகளுக்கு, தங்கள் மாநிலங்களில் இல்லாமல், வெளிமாநிலங்களில் பயிற்சி
மையங்கள் அமைக்க முடியாது; அப்படி அமைக்க, யு.ஜி.சி., விதிகளைப் பின்பற்றி
அனுமதி பெற வேண்டும். இதேபோல், நிகர்நிலைப் பல்கலைகளும், வேறு மாநிலங்களில்
படிப்பு மையங்கள் அமைக்க, அனுமதி பெற வேண்டும்.
இதேபோல், எந்த பல்கலைக்கும்,
கல்லுாரிக்கும், பி.இ., மற்றும் பி.டெக்., பாடப்பிரிவுகளை, பட்டப்
படிப்பாகவோ, டிப்ளமோ படிப்பாகவோ அல்லது முதுகலையாகவோ, திறந்தவெளிப்
படிப்பாகவோ நடத்த அனுமதி அளிக்கவில்லை. இதேபோல், எந்தவொரு பல்கலைக்கும்,
'ஆன் - லைன்' படிப்பை நடத்தவும் அனுமதிக்கவில்லை. எனவே, போலி
விளம்பரங்களைக் கண்டு, பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு
உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...