பயணிகளுக்கு
இணையதளம் மூலம் எடுக்கும் ‘இ-டிக்கெட்’கள் விரைவாக கிடைப்பதற்கு வசதியாக
ஐஆர்சிடிசி நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து ஐந்து சர்வர்களை வாங்கியுள்ளது.
ரயில்களில்
பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால்,
ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு கிடைப்பது என்பது குதிரைக்
கொம்பாக உள்ளது. குறிப்பாக, பண்டிகை நாட்கள், வார விடுமுறை நாட்களில்
டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கூடுதல்
கட்டணத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டும் பயணிகளுக்கு
கிடைப்பதில்லை.
இதற்குக்
காரணம், சர்வர் மிகவும் மெதுவாக இயங்குவதால் பயணிகளுக்கு தட்கல் டிக்கெட்
கிடைப்பதில்லை. இந்நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக,
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ஐஆர்சிடிசி)
சிங்கப்பூரில் இருந்து ஐந்து சர்வர்களை இறக்குமதி செய்துள்ளது.
இத்தகவலை ஐஆர்சிடிசி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஏ.கே.மனோச்சா தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...