அரசு உதவிபெறும் பள்ளிகளில், இலவசப் பொருட்கள் வழங்குதல், ஆசிரியர் பணி
நியமனம் உள்ளிட்ட ஆவணங்களை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தர வேண்டும்' என,
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டு
உள்ளார்.இதுதொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:
* ஒவ்வொரு உதவி தொடக்கக் கல்வி அலுவலரும், ஜூன் முதல் ஏப்ரல் வரை, குறைந்தது, ஒரு மாதத்தில், 18 பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும்.
* மாணவர், ஆசிரியர் வருகைப் பதிவேடு, இலவசத் திட்டங்களின் செயல்பாடு,
பயனாளிகளின் விவரங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என, பார்க்க வேண்டும்;
அதன் நகலைப் பெற வேண்டும்.
* பள்ளியில், ஒரு வேலைநாள் முழுவதும் இருந்து, பள்ளியின் நடவடிக்கை,
ஆசிரியரின் கற்பித்தல், மாணவரின் கற்றல், கட்டமைப்பு வசதி, தேர்ச்சி
விகிதம், குறைபாடுகள் போன்றவற்றை ஆய்வு செய்து, அறிக்கை தயார் செய்ய
வேண்டும்.
* மாணவர்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்க வேண்டும்.
* கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் பராமரிப்பு நிலை, கணினி உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடுகள் குறித்து கண்டறிய வேண்டும்.
* ஆபத்தை
ஏற்படுத்தும் திறந்தவெளிக் கிணறுகள், இடிந்த, இடியும் நிலைக் கட்டடங்கள்,
உயரழுத்த மின் கம்பங்கள் போன்றவற்றால் பிரச்னை இருந்தால், உடனடியாக
அறிக்கைத் தாக்கல் செய்து, அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க
வேண்டும்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டு உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...