தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்
சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஈரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர்
ஆறுமுகம் தலைமை வகித்தார். பணி நிறைவு ஆசிரியர்கள் ராமசாமி, செங்கோட்டையன்,
விஸ்வநாதன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடந்த
பொதுக்குழு கூட்டத்தில், பொது செயலாளர் நேரு ஆகியோர் பேசினார்.
அனைத்து மேல்நிலை
பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் துவக்கப்பட வேண்டும். பெற்றோர்
ஆசிரியர் கழக ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில், ப்ளஸ் 1 வகுப்பில்
தொழிற்கல்வி மாணவர்கள் சேர்க்கை வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் நாச்சிமுத்து, பொதுகுழு உறுப்பினர்கள்
பிரபாகரன், நாச்சிமுத்து, உஷா, ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...