மொபைலில் பேசும்போது திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டால்,
அந்தஅழைப்புக்கான கட்டணத்தை வாடிக்கையாளர் கணக்கிலேயே திரும்ப சேர்க்க
டிராய் திட்டமிட்டுள்ளது.
மொபைல் பயன்பாட்டில் உலகில் 2வது இடத்தில்
இந்தியா உள்ளது. இருப்பினும், மொபைலில் பேசும்போது திடீரென சிக்னல் இழந்து
இணைப்பு துண்டிப்பது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு
ஒழுங்கு முறை ஆணையமான டிராய்க்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம்
உள்ளன.இதையடுத்து, பேசும்போது இணைப்பு துண்டிக்கப்பட்டால் அந்த
அழைப்புக்கான கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்கே கூடுதல் டாக்டைம் ஆக அளிக்க
டிராய் முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘செல்போன் நிறுவனங்களின் சேவை குறைபாட்டுக்கு வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது. இணைப்பு திடீரென துண்டிக்கப்படுவது தொடர்பான புகார்கள் பெருநகரங்களில் அதிகரித்துள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வுகாண அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. பேசும்போது இணைப்பு துண்டித்தால் அந்த கட்டணத்தை மீண்டும் வாடிக்கையாளர்கள் டாக் டைமில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை அமைச்சகம் வெளியிடும்’’ என்றார்.
இது குறித்து தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘பேசும்போது இணைப்பு துண்டிப்பதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆராய வேண்டும். இந்த பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...