Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அண்ணா பல்கலை 'ரேண்டம்' எண் இன்று வெளியீடு

          அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது.அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லூரி களில், புதிய கல்வியாண்டில் ஒற்றைச் சாளர கவுன்சிலிங் முறையில், மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை, முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
 
           இந்த ஆண்டு, 1.90 லட்சம் பேர் விண்ணப்பங்கள் வாங்கினர். இதில், ஒரு லட்சத்து, 53 ஆயிரத்து, 545 பேர் விண்ணப்பித்தனர்.பரிசீலனை முடிந்து, மாணவர்களுக்கான சமவாய்ப்பு, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது. அண்ணா பல்கலையின் நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கைப் பிரிவு அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு, 'ரேண்டம் எண்' வெளியீடு துவங் கும் என, தமிழ்நாடு மாணவர் சேர்க்கை செயலரும், அண்ணா பல்கலை பேராசிரியருமான ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்து உள்ளார்.
இந்த எண், அந்தந்த விண்ணப்ப எண்களுடன், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும். வரும், 19ம் தேதி, 'கட் - ஆப்' அடங்கிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 'ரேண்டம்' எண், சில மாணவர்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. ஒரே, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற மாணவர்களில், யாருக்கு முன்னுரிமை என்ற பிரச்னையை சமாளிக்க, இந்த முறை பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டு, 1.90 லட்சம் பேரில், ஐந்து பேருக்கு மட்டுமே, 'ரேண்டம் எண்' பயன்படுத்தும் அவசியம் ஏற்பட்டது.

எம்.பி.பி.எஸ்., தரவரிசை பட்டியல் 

தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இவற்றில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,257 எம்.பி.பி.எஸ்., - 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில், 580 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான, மாணவர் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு, வரும் 19ம் தேதி துவங்குகிறது.பிளஸ் 2 மறுகூட்டல் முடிவு கள் குறித்த, 'சிடி'யை, பள்ளிக் கல்வித் துறை, 12ம் தேதி மருத்துவக் கல்வி இயக்கத்தில் வழங்கியது. விண்ணப்பித்த, 32,184 பேரில், 1,300 மாணவர்களின் மதிப்பெண்கள் மாறி உள்ளன. 

இதனடிப்படையில், இறுதி செய்யப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியல், மருத்துவக் கல்வி இயக்ககத்தில், இன்று மாலை வெளியிடப்படுகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணனும் பங்கேற்கின்றனர். தரவரிசைப் பட்டியல் விவரங்களை, www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளங்களில், மாணவர்கள் பார்க்கலாம்.

கணக்கீடு எப்படி?

முதலில் கணிதத்தில் யார் அதிக மதிப்பெண் என, பார்க்கப்படும். அதில், சமமாக இருந்தால் இயற்பியல்; அதில் சமமாக இருந்தால் வேதியியல், பின், நான்காம் பாட மதிப்பெண்கள் சரிபார்க்கப்படும். இதில், அதிக மதிப்பெண் பெறுபவருக்கு தரவரிசையில் முன்னுரிமை தரப்படும். நான்கு பாடங்களிலும் மதிப்பெண் சமமாக இருந்தால், பிறந்த தேதி சரிபார்க்கப்பட்டு, மூத்தவருக்கு முன்னுரிமை தரப்படும். அதிலும் சமமாக இருந்தால், 'ரேண்டம் எண்' பயன்படுத்த முடிவு செய்யப்படும். இந்த ரேண்டம் எண்ணில் யார் அதிக எண்ணிக்கை பெறுகிறாரோ, அவருக்கு தர வரிசையில் முன்னுரிமை கிடைக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive