மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்த நபர்களின் பதிவு எண் பட்டியல்
திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட
உள்ளது என்றார் முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி. இதுகுறித்து அவர்
சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மார்ச் 2015 மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதிய, பெரம்பலூர் மாவட்ட
மாணவர்களின் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில்
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவு எண்கள் பட்டியல்
http:www.dge.tn.nic.in என்ற இணையத்தில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு
வெளியிடப்படும்.
பட்டியலில் இல்லாத பதிவு எண்களுக்கான விடைத்தாள்களில், எவ்வித மதிப்பெண்
மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள
தேர்வர்கள் ஜூன் 16 ஆம் தேதி காலை 10 மணி முதல் மேற்கண்ட இணையத்தில்
தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை தெரிவித்து,
தங்களுக்கான திருத்தப் பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண்
சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...