'பொதுத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் மீதும், கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்,'' என, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
கோவையில் நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில், தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: பொதுத்தேர்வுகளை, எவ்வித பிரச்னையும் இன்றி நடத்த, பல வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இதையும் மீறி சில இடங்களில், தொழில்நுட்ப உதவி மூலம், முறைகேடுகள் நடந்து விடுகின்றன. இனி வரும் காலங்களில், பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் மீதும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
அம்புகளை பிடித்து விட்டீர்கள் எய்தவர்களை என்ன செய்தீர்கள்
ReplyDelete