தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களிலும் பொது இ-சேவை மையங்களை அமைத்து
நிர்வகித்து வருகிறது.
இம்மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர
அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் காலை 9.45 மணி முதல் மாலை 5.45
மணி வரை செயல்படும்.
ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கெனவே
விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து
ஒப்புகைச்சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையங்களுக்குச் சென்று, ஒப்புகைச்
சீட்டில் உள்ள பதிவு எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டையைப்
பெற்றுக்கொள்ளலாம். ஓப்புகைச்சீட்டு பதிவு எண்ணைப் பயன்படுத்தி பிளாஸ்டிக்
ஆதார் அட்டை பெறுவதற்கு ரூ.40 கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே ஆதார்
எண் கிடைக்கப்பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டைபெற விரும்பினால், ஆதார்
எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ரூ.30
கட்டணம் செலுத்த வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...