வத்தலகுண்டு அருகே செக்காப்பட்டியில் உள்ள
உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி மாணவர்கள்,
பொதுமக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செக்காபட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில்
800 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் செக்காபட்டி,
அக்கரைப்பட்டி, மீனாக்காள்பட்டி, உச்சப்பட்டி, கரட்டுப்பட்டி,
சின்னுப்பட்டி, பண்ணைப்பட்டி, கூட்டாத்து அய்யம்பாளையம், வடிவேல்நகர்,
கண்ணாபட்டி, கீழ அச்சனம்பட்டி, மேல அச்சனம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த
மாணவர்கள் படித்து வருகின்றனர்
இப்பள்ளியை
மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி கடந்த 2013ஆம் ஆண்டில் இப்பகுதி
பொதுமக்கள் தங்கள் பங்களிப்பாக 20 சதவீத தொகையாக ரூ.2 லட்சம்
கட்டியுள்ளனர். ஆனால் இதுவரை பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை. எனவே பள்ளியை
உடனடியாக தரம் உயர்த்தக்கோரி, திங்கள்கிழமை செக்காபட்டி உயர்நிலைப் பள்ளி
முன் குவிந்த மாணவர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...