கோவை மாவட்டம் அன்னூர் வட்டார அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சிறப்பு
குழந்தைகளுக்கான வளமையம், அன்னூர் தெற்கு பள்ளி வளாகத்தில் செயல்பட்டு
வருகிறது. இதில், 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயின்று
வருகின்றனர். 4 ஆசிரியர்கள், 2 உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மையத்தின் மேற்பார்வையாளராக சுப்புலட்சுமி பணியாற்றி வருகிறார். பணியில்
முறைகேடாக நடப்பதாக கூறி சுப்புலட்சுமி மீது மாவட்ட நிர்வாகத்துக்கு
அண்மையில் புகார் அனுப்பப்பட்டது.
தனக்கு கீழ் பணிபுரியும் சிறப்பு
ஆசிரியைகள் தான், தன்மீது புகார் கொடுத்திருக்க வேண்டும் என நினைத்து
மேற்பார்வையாளர் சுப்புலட்சுமி, சிறப்பு ஆசிரியரான மோகனசுந்தரி உள்ளிட்ட 4
பேரையும் பணியிட மாற்றம் செய்து விடுவதாக மிரட்டி வந்தாராம். இதில்
மனமுடைந்த சிறப்பு ஆசிரியர் மோகனசுந்தரி, நேற்று முன்தினம் நள்ளிரவு விஷம்
குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த தாய், கூச்சல்
போட்டதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மோகனசுந்தரியை மீட்டு
அன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு,
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...