கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெரும்பாலும்
முடிந்துவிட்ட நிலையில் 'சீட்' வாங்கித் தருவதாக இடைத்தரகர்கள் பெற்றோரிடம்
வசூல் வேட்டை நடத்துகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்ய கல்லூரி
முதல்வர்கள் முடிவு செய்துள்ளனர்.கல்லூரிகளில், புதிய கல்வியாண்டுக்கான
முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த ஆண்டு, பி.காம்., மற்றும் கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் படிப்புகள்;
கணிதப் பிரிவில், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும்
இயற்பியலுக்கு அதிக போட்டி காணப்பட்டது.சில தனியார் கல்லூரிகளில், பி.காம்
'சீட்'டுக்கு, பல லட்சம் ரூபாய் விலை நிர்ணயித்ததாக தகவல்கள் வெளியாயின.
அரசு கல்லூரிகளில் அரசியல்வாதிகள், கல்வித் துறையினர் மூலம் சிபாரிசு
கடிதம் பெற்று, 'சீட்' வாங்க பெற்றோர் முயற்சித்தனர்.இந்நிலையில்,
கல்லூரிகளில் முக்கிய படிப்புகளில் காலியாக உள்ள ஒரு சில இடங்களுக்கு, அதிக
போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களை வாங்கித் தர ஆங்காங்கே கல்லூரிகளைச்
சுற்றி, இடைத்தரகர்கள் நடமாட்டம் திகரித்துள்ளது.அரசியல்வாதிகளின்
சிபாரிசில், 'சீட்' வாங்கித் தருவதாகக் கூறி, பெற்றோர் மற்றும் மாணவ,
மாணவியரிடம், இடைத்தரகர்கள் வசூல் வேட்டை நடத்துவதாக புகார்கள்
எழுந்துள்ளன.இதுகுறித்து, கல்லூரி முதல்வர்கள் சிலர்
கூறியதாவது:இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் சி.ஏ., போன்ற படிப்புகளுக்கு
செல்வோர், மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் சென்றால் மட்டுமே சில இடங்கள்
காலியாகும்.அந்த இடங்களுக்கும் மதிப்பெண் படி காத்திருப்போர் பட்டியல்
உள்ளது. எனவே இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்.பொதுமக்கள் தகவல் அளித்தால்,
இடைத்தரகர்கள் மீது போலீசில் புகார் செய்யப்படும்.இவ்வாறு அவர்கள்
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...