தமிழகத்தில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 19-ஆம்
தேதி முதல் நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல்
கட்டக் கலந்தாய்வில் 2,257 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும், 551 சுயநிதி
அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு வரும்
19-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி
உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,257
எம்.பி.பி.எஸ். இடங்கள், கோவை பி.எஸ்.ஜி. உள்பட 8 சுயநிதி மருத்துவக்
கல்லூரிகளின் 551 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் இந்தக்க
கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன. சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல்
மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களும் முதல் கட்டக் கலந்தாய்வில்
நிரப்பப்பட உள்ளன. முதல் கட்டக் கலந்தாய்வில் இடம்பெறும் 20 அரசு
மருத்துவக் கல்லூரிகள், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள
எம்.பி.பி.எஸ். இடங்கள் குறித்த விவரம் (பட்டியல்):
20 அரசு மருத்துவக் கல்லூரிகள்- 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள்
கல்லூரியின் பெயர் மொத்த இடங்கள் தமிழக ஒதுக்கீடு அகில இந்திய
ஒதுக்கீடு
1 சென்னை ஓமந்தூரார் 100 85 15
2 சென்னை (எம்எம்சி) 250 212 38
3 ஸ்டான்லி 250 213 37
4 கீழ்ப்பாக்கம் 150 128 22
5 செங்கல்பட்டு 100 85 15
6 மதுரை 155 132 23
7 தஞ்சாவூர் 150 127 23
8 கோவை 150 128 22
9 திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் 150 128 22
10 சேலம் மோகன் குமாரமங்கலம் 100 85 15
11 திருநெல்வேலி 150 127 23
12 தூத்துக்குடி 150 127 23
13 கன்னியாகுமரி 100 85 15
14 வேலூர் 100 85 15
15 தேனி 100 85 15
16 தர்மபுரி 100 85 15
17 விழுப்புரம் 100 85 15
18 திருவாரூர் 100 85 15
19 சிவகங்கை 100 85 15
20 திருவண்ணாமலை 100 85 15
8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்- 551 அரசு ஒதுக்கீட்டு இடங்கள்
கல்லூரியின் பெயர் ஒதுக்கீடு
1 சென்னை தாகூர் 75
2 பி.எஸ்.ஜி. கோவை 97
3 கற்பகம், கோவை 75
4 ஐ.ஆர்.டி, ஈரோடு 39
5 கற்பக விநாயகா,
மதுராந்தகம் அருகில் 65
6 வேலம்மாள், மதுரை 75
7 தனலட்சுமி சீனிவாசன்,
பெரம்பலூர் 75
8 ஸ்ரீ மூகாம்பிகை,
குலசேகரம், கன்னியாகுமரி 50
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...