சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர்களாக பணியாற்ற முதன் முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில் வேலைவாய்ப்பு முகாம்
நடத்தப்படுகிறது.
இந்த வாய்ப்பினை தமிழ் பயின்ற மாணவ, மாணவியர்கள்
பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழியல்துறைத் தலைவர் அரங்க.பாரி வேண்டும்
விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "
சிங்கப்பூர் பள்ளிகளில் தமிழாசிரியர்களாக பணியாற்ற தகுதியானவர்களை தேர்வு
செய்வதற்கான வளாக நேர்காணல் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில் ஜூன்
15,16 தேதிகளில் நடைபெறவுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை தமிழில் பட்டம்
பெற்றவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம். அண்ணாமலைப் பல்கலையில் நடைபெறும்
வளாக நேர்காணலுக்கு சிங்கப்பூர் எஜூகேர் (Educare) நிறுவனத்திலிருந்து
நான்கு பேர் கொண்ட குழு வருகை தரவுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்
படித்த மாணவ, மாணவியர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம் என அரங்க.பாரி
தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களை 94880 13050 என்ற எண்ணில் தொடர்பு
கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...