Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பூட்டுப் போட்டார் ஒரு சி.இ.ஓ., உடைத்தார் மற்றொரு சி.இ.ஓ.,

         குமரி மாவட்ட சி.இ.ஓ., அலுவலகத்துக்கு ஒரு சி.இ.ஓ., பூட்டு போட்டார். சிறிது நேரத்தில் மற்றொரு சி.இ.ஓ. தாசில்தார் முன்னிலையில் பூட்டை உடைத்தார்.குமரி மாவட்ட சி.இ.ஓ. ராதாகிருஷ்ணன். இவர் அண்மையில் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய சி.இ.ஓ.வாக விருதுநகர் சி.இ.ஓ.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை பதவி ஏற்றார்.

        இந்நிலையில் அரசின் உத்தரவுக்கு எதிராக ராதாகிருஷ்ணன் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னை சில குற்றச்சாட்டுகளின் பேரில் பழி வாங்குவதாகவும், கல்வித்துறை செயலாளர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதால் இணை இயக்குனருக்கான பதவி உயர்வு பட்டியில் இரண்டாவது இடத்தில் இருந்தும் தனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதன் மீது தீர்ப்பளித்த நீதிபதி வைத்தியநாதன், ராதாகிருஷ்ணன் குமரி மாவட்ட சி.இ.ஓ. வாக உள்ள நிலை அப்படியே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார். நேற்று முன்தினம் மாலையில் இந்த தீர்ப்பு வெளியானது. தீர்ப்பு நகலை பெற்ற ராதாகிருஷ்ணன் நேற்று காலை நாகர்கோவிலில் சி.இ.ஓ. அலுவலகத்துக்கு வந்து தனது அறைக்கதவுக்கு வேறு ஒரு பூட்டு போட்டு விட்டு தக்கலையில் பள்ளிகளில் ஆய்வு நடத்த சென்றார். இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் வாசுகி முன்னிலையில் பூட்டு உடைக்கப்பட்டது. அங்கு அரசு தற்போது நியமித்துள்ள ஜெயக்குமார் அமர்ந்து பணிகளை மேற்கொண்டார்.




2 Comments:

  1. pali vangakoodathu. court utharavai mathinga. neethi, nermai, nayam high officials idam irukkanum. unmaiya nangu visarikkanum. athukku appuram nadavadikkai edukkanum. oruvar melai veen poi pukar varavum vaippirukku. ithai educational principle secretry kavanathil kollanum.

    ReplyDelete
  2. கல்வித்துறை செயலர் மீது கூறும் ஊழல் புகாருக்கு என்ன சொல்ல போராங்க..? கோர்ட்டை அவமதித்து மன்னிப்பு கேட்பது பழகிபோயிடுச்சோ ..?கடந்த சில ஆண்டுகளைப்போல் எந்த ஆண்டிலும் கல்வித்துறைக்கு எதிராக இந்த அளவிற்கு நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படவில்லை.. இது எதை கட்டுகிறது கல்வித்துறையின் திறமையையா...? கொஞ்சம் யோசிங்கம்மா ... என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா... முதல்ல குமரி மாவட்ட மு.க.அ. யாருன்னு சொல்லுங்க....பாவம் பசங்க...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive