அரசு பள்ளிகளில், பராமரிப்பு தொகை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி
என்ற பெயரில், கட்டாய வசூல் வேட்டை நடத்துகின்றனர். ஆனால், 'நன்கொடை
வசூலிக்கக் கூடாது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.புதிய கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அரசு பள்ளியைப் பொறுத்தவரை,
ஆங்கில வழி வகுப்புக்கு மட்டும் சிறிய அளவில், 500 ரூபாய்க்குள் பயிற்சி
கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், எந்த வகுப்புக்கு எவ்வளவு கட்டணம்
என்று பள்ளிகளில் அறிவிக்கவில்லை. தமிழ்வழி வகுப்புக்கு எந்தக் கட்டணமும்
கிடையாது.
ஆனால், பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 500 ரூபாயில்
துவங்கி, 4,000 ரூபாய் வரை, மாணவ, மாணவியரிடம் கட்டாய வசூல்
செய்யப்படுகிறது. இதில், 'பெற்றோர் - ஆசிரியர் கழக நன்கொடை' என்ற பெயரில்,
50 ரூபாய்க்கு மட்டும் ரசீது தரப்படுகிறது.
சில பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியாக, பல ஆயிரம் ரூபாய்
வசூலிப்பதும் நடக்கிறது.எந்த உத்தரவும் இல்லாமல் வசூல் செய்வது குறித்து
பெற்றோர், பள்ளிகளில் கேட்டால், 'புத்தகம், சீருடை, காலணி, ஜியோமெட்ரி
பாக்ஸ் போன்றவற்றை நாங்கள் தானே இலவசமாக பெற்றுத் தருகிறோம். 'அதைக் கொண்டு
வர, போக்குவரத்து செலவுக்கு வேண்டாமா?' என்று, கோபமான பதில் வரும் சூழல்
உள்ளது.
இதனால், சாதாரண கூலித் தொழிலாளி, கணவனை இழந்து குடும்பம் நடத்தும்
பெண்கள், ஏழைக் குடும்ப பெற்றோர், பணம் கட்ட முடியாமல்
பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரிடம்
கேட்டபோது, 'மாணவர்களிடம் இருந்து பெறும் நிதியில் தான், உட்கட்டமைப்பை
சிறப்பாக வைக்க முடிகிறது. பள்ளியின் பராமரிப்புக்காக தான், இந்த தொகையை
வாங்குகிறோம்' என, தெரிவித்தார்.
இதற்கிடையில், பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து
பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 'அரசு, அரசு உதவி
பெறும் பள்ளிகளில், பெற்றோரிடம் கட்டாய நன்கொடை வசூலிப்பதாக புகார்கள்
வந்துள்ளன. 'எந்த பள்ளியிலும் கட்டாய வசூல் நடத்தக் கூடாது. இந்த புகார்கள்
வராமல், ஆசிரியர்கள் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்' என, எச்சரித்து
உள்ளார்
பெற்றோர் ஆசிரிய கழகமே வசூல் வேட்டைக்காக அமர்த்துவது தானே...புகார்கள் வரும் பள்ளியில் ரகசிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என விதி இருந்தும் எத்தனைப்பள்ளிகளில் நடத்தப்படுகிறது? நிறைய பள்ளிகளில் பெற்றோர் ஆசிரிய கழக ஆசிரியர்களை நியமித்து வசூல் வேட்டை செய்கின்றனர். அரசு அளவுக்கு அதிகமாக ஆசிரியர்களை நியமிக்கும் போது எதற்கு பெற்றோர் ஆசிரிய கழக மூலம் நியமிக்கவேண்டும்? இது மட்டும் அல்லாமல் பெற்றோர் ஆசிரிய கழக தலைவர்களே ஒரு சில விகித்தை வசூல் செய்யும் தொகையில் வாங்கிக்கொள்கின்றனர். இதன் மீது கல்விதுறை கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். அரசு பள்ளியில் படிக்க வைப்பவர்கள் என்ன பணக்காரர்களா? அன்றாட உணவுக்கே வழி இல்லாதவர்கள் தானே ? அவர்களிடம் போய் வசூல் செய்யும் தலைமையாசிரியர்கள் வாங்கும் சம்பளத்திற்கு மட்டும் வேலை செய்தால் போதும். எத்தனை சலுகைகள் நிதிகள் பள்ளிகளுக்காக ஒதுக்கப்படுகின்றன அவற்றை முறையாக பயன்படுத்தினாலே போதும்.1.பள்ளி பராமரிப்புக்கு அரசு பணம் வழங்குகிறது 2.பள்ளிக்கு தேவையான பொருள்கள் வாங்க SSA மூலம்மும் RMSA மூலமும் வழங்குகிறது 3.மின்சாரத்திற்கு பணம் வழங்குகிறது .இவைகளைத் தவிற வேறு என்ன தேவைகள் பள்ளிக்கு தேவை . பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்களாக இருக்க ஆசைப்படும் தலைவர்கள் வேறு ஏதேனும் தேவை இருந்தால் அரிமா சங்கத்தையோ ரோட்டரிசங்கத்தின் மூலமாகவோ அல்லது புரவலர்கள் மூலமாகவோ பூர்த்தி செய்யலாம் அனால் அதனை செய்யாமல் மாணவர்களின் பெற்றோரிடம் வசூல் செய்வது மனதிற்கு வருத்தத்தை அளிக்கிறது. கொஞ்சம் தலைமையாசிரியர்கள் மனச்சாட்சியோடு நடந்தால் போதும்...( இவர்களில் ஒரு சில மனசாட்சியுடைய தலைமையாசிரியர்களும் இருக்கதான் செய்கிறார்கள் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்)
ReplyDeleteமேற்கண்ட கருத்து முற்றிலும் உண்மை. மனசாட்சி உள்ள அனைத்து ஆசிரியர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. அதைவிட கொடுமை என்னவென்றால் பெ.ஆ.க.தலைவர்கள் யாரும் படிக்கும் மாணவனுடைய பெற்றோர் கிடையாது. எல்லாம் பதவி மோகம் கொண்டவர்கள். இதனை ஒழித்தால்தான் பள்ளிகள் உருப்படும். சுய நலமில்லாமல் பள்ளி நலனுக்காக இருக்கும் பெ.ஆ.க.தலைவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
ReplyDeleteநன்றி நண்பரே...
Delete