தமிழகத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு, 12 மாநகராட்சிகள்; 'அம்ருட்' திட்டத்திற்கு, 20 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசு, அடுத்த ஏழாண்டுக்குள், 100 ஸ்மார்ட் சிட்டிகளை ஏற்படுத்த
முடிவு செய்துள்ளது. அதேபோல், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு மேல் இருக்கும்
நகராட்சிகளில், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த, அம்ருட்
திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரை நினைவு கூறும்
வகையில், 'அடல் மிஷன் பார் ரிஜுவனேஷன் அண்டு அர்பன் டெவலப்மென்ட்' என,
பெயரிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 12 மாநகராட்சிகள்; அம்ருட்
திட்டத்தின் கீழ், 20 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திட்டத்திற்கான
வழிகாட்டி நெறிமுறைகளை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை
வெளியிட்டுள்ளது. திட்டம் செயல்பாடு குறித்து, தேர்வு செய்யப்பட்ட நகராட்சி
கமிஷனர் மற்றும் பொறியாளர்களுக்கு, டில்லியில் இரண்டு நாட்கள், பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது.
திட்ட செயல்பாடு குறித்து, தமிழக அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும் நகரில்,
அம்ருட் திட்டமும் செயல்படுத்தப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஏற்கனவே
உள்ள நகரை, மறு சீரமைப்பது அல்லது புதிய நகரை உருவாக்குவது என, இரண்டு
வகையாக செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு
செய்யப்பட்டுள்ள நகரங்களில், உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும்.
நகரில், 24 மணி நேரம் குடிநீர், மின்சாரம் வழங்கப்படும். அனைத்து
பணிகளும், கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். கட்டட வரைபட ஒப்புதல் முதல் கொண்டு
அனைத்தையும், கம்ப்யூட்டர் மூலம் பெற வழி வகை செய்யப்படும்.
இத்திட்டத்திற்கான செலவில், 50 சதவீதத்தை, மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள
50 சதவீதத்தை, மாநில அரசு வழங்கும்.
அதேபோல், அம்ருட் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில்,
அடிப்படை வசதிகள் அமல்படுத்தப்படும். திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட
அளவில், மாநில அளவில், தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. குழுக்கள்
அமைத்த பின், திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என, முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
'ஸ்மார்ட் சிட்டி'க்கு தேர்வான நகரங்கள் மக்கள் தொகை (லட்சத்தில்)
சென்னை 86.53
கோவை 21.36
மதுரை 14.65
திருச்சி 10.22
திருப்பூர் 9.63
சேலம் 9.17
ஈரோடு 5.21
திருநெல்வேலி 4.97
வேலுார் 4.84
துாத்துக்குடி 4.11
திண்டுக்கல் 2.92
தஞ்சாவூர் 2.91
'அம்ருட்' திட்டத்திற்கு தேர்வான நகரங்கள் மக்கள் தொகை
(லட்சத்தில்)
ராணிப்பேட்டை 2.64
சிவகாசி 2.34
கரூர் 2.34
உதகமண்டலம் 2.33
ஓசூர் 2.29
நாகர்கோவில் 2.24
காஞ்சிபுரம் 2.21
குமாரபாளையம் 1.95
காரைக்குடி 1.81
நெய்வேலி 1.79
கடலுார் 1.73
கும்பகோணம் 1.67
திருவண்ணாமலை 1.45
பொள்ளாச்சி 1.35
ராஜபாளையம் 1.30
குடியாத்தம் 1.24
புதுக்கோட்டை 1.17
வாணியம்பாடி 1.17
ஆம்பூர் 1.14
நாகப்பட்டினம் 1.02
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...