தவறான மதிப்பெண் பட்டியல் கொடுத்த, தலைமை ஆசிரியைக்கு, உதவி தொடக்க கல்வித்துறை அலுவலர் விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
மேற்கு ஆரணி யூனியனில், 77 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. புதுப்பாளையம், குன்னத்தூர், அய்யம்பாளையம், ஒண்ணுபுரம் உட்பட, 36 பள்ளிகள், உதவி தொடக்க
கல்வி அலுவலர் குணசேகரன் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.ஒவ்வொரு
ஆண்டும், பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை, சம்பந்தப்பட்ட தலைமை
ஆசிரியர், உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.
ஆனால், ஒண்ணுபுரம் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை, அந்த
பள்ளிதலைமை ஆசிரியை செல்வி நேரடியாக சமர்பிக்காமல், அப்பள்ளியில்
பணிபுரியும், ஆசிரியர் கிருபாகரன் மூலமாக, கடந்த, மே, 29ம் தேதி, உதவி
தொடக்க கல்வி அலுவலர் டேபிளில், யாருக்கும் தெரியாமல் வைத்து விட்டு சென்று
விட்டார்.இந்த பட்டியலில், உதவி தொடக்க கல்வி அலுவலர் குணசேகரன் தேர்ச்சி
விகிதத்தை சரிபார்த்த போது, மாணவர்களின் மதிப்பெண் கூட்டு தொகை தவறுதலாக
இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஏ.இ.இ.ஓ., குணசேகரன், பள்ளி தலைமை
ஆசிரியை செல்விக்குவிளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார்.
அதில், மே, 28ம் தேதி வரை மாணவர்களின் மதிப்பெண் சமர்பிக்காமல், 29ம் தேதி
சமர்பித்த பட்டியலில், 48 இடங்களில் தவறு உள்ளது. எனவே, மதிப்பெண் பட்டியல்
சரிவர செய்யாமல் இருந்தமைக்கு உரிய விளக்கத்தினை, ஒரு வாரத்தில் அளிக்க
வேண்டும் என, விளக்க கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...