கோவை மாவட்டத்தில், தொடக்க கல்வித்துறையின்
கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்
சுற்றுச்சுவர் வசதி இல்லாததால் மாணவர்களின் பாதுகாப்பு
கேள்விக்குறியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில், 860 அரசு, ஊராட்சி,
நகராட்சி, மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு
வருகின்றன. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுற்றுச்சுவர் பாதி
கட்டிய நிலையிலும், முழுமையாக இல்லாமலும், இடிந்து விழும் நிலையிலும்
உள்ளன.இதனால், பள்ளி வளாகத்தினுள் வெளியாட்கள் நுழைவதும், மாணவர்கள்
பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதும் நடக்கிறது. ஆட்கடத்தல்
மற்றும்வனவிலங்குகள் அச்சுறுத்தல் என பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகிறது.
குறிப்பாக, கோவை சர்க்கார் சாமக்குளம்
ஒன்றியத்தில், கருப்பராயர் பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சங்கசாமி
கவுண்டர் புதூர் துவக்கப்பள்ளி, அஞ்சுகம் நகர் துவக்கப்பள்ளி,
உடையாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி; வீட்டு வசதி வாரிய
துவக்கப்பள்ளிகளிலும், காமராஜர் நகர் கோண்டி காலனி, தாமரைக்குளம் அரசு
துவக்கப்பள்ளி, ஆனைமலை பகுதியில், 18 தொடக்கப் பள்ளிகளிலும், இரண்டு
நடுநிலைப்பள்ளிகளிலும் சுற்றுச்சுவர் வசதிகள் கிடையாது.
பல அரசு பள்ளிகளில் இந்நிலை காணப்படுகிறது.அரசு
பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ’எங்கள் பள்ளியில் சுற்றுச்சுவர்
கிடையாது. 200 மாணவர்கள் படிக்கின்றனர். இடைவேளை நேரங்களில் அனைவரையும்
கண்காணிக்க முடிவதில்லை. பாட வேளையில், வகுப்பறையை விட்டு செல்லும்
மாணவர்கள் சிலர், பள்ளியை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.
மாணவர்களின் குறும்புத்தனத்தால் அசம்பாவிதங்கள்
ஏற்பட்டால், ஆசிரியர்கள் பலிகடா ஆகவேண்டியுள்ளது. நான்கு புறமும்
சுற்றுச்சுவர் இல்லை, ஆசிரியர்கள் நாங்கள் பாடம் நடத்துவதா, யார் எங்கே
போகிறார்கள் என்று பார்ப்பதா என்று புரியவில்லை’ என்றார்.
கல்வியாளர் பாரதி கூறுகையில், ”அனைவருக்கும்
கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
இதில் பெரும்பகுதி ஆசிரியர்களின் சம்பளம் என்பதை யாரும் உணர்வதில்லை.
ஆசிரியர்கள் பயிற்சி, உபகரண செலவினம் போன்றவற்றுக்கு நிதி போக, மீதம் உள்ள
சிறு தொகை, 32 மாவட்டங்களின் கட்டமைப்பு வசதிகளுக்கு பிரித்து
கொடுக்கப்படுகிறது.”
அதே போல், மாநில அரசு பெரும் அளவு நிதியை
நலத்திட்டங்களுக்கு கொடுத்துவிட்டு, அடிப்படை வசதிகளுக்கு, குறைந்தளவே
ஒதுக்குகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.
அசம்பாவிதம், விபத்துக்கள் ஏற்படும் நேரத்தில் மட்டும் விழித்துக்கொண்டு
பெயரளவில் செயல்படுகிறது,” என்றார்.
பல்வேறு அரசுப்பள்ளிகளில், ஆண்டுக்கு ஆண்டு
மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே செல்கிறது. தனியார் பள்ளிகளை
நாடிச்செல்லும் பெற்றோர், அரசுப்பள்ளிகளில் நிலவும் வசதிக் குறைபாடுகளை
முக்கிய காரணமாக குறிப்பிடுகின்றனர்.
சேர்க்கையை அதிகரிக்கவும், இடையில் நிற்கும்
மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும், ஆசிரியர்களை வீடு
வீடாகச்செல்லும்படி வலியுறுத்தும் கல்வித்துறை நிர்வாகம், பள்ளிகளுக்கு
சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான், சமூக விரோத செயல்களில் இருந்து அரசுப்பள்ளிகளையும், அவற்றில்
பயிலும் மாணவர்களையும் காப்பாற்ற முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...