Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகள் இன்று திறப்பு

         அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை ( ஜூன் 1) திறக்கப்பட உள்ளன.

 
          அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசுத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
 
கடந்த சில நாள்களாக கோடை வெப்பத்தின் தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளிவைக்கப்படலாம் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், திட்டமிட்டவாறு ஜூன் 1-ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகின்றன.


மாணவர்களுக்குப் பள்ளித் திறக்கும் நாளான திங்கள்கிழமையே இலவசப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை வழங்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

ஏற்கெனவே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் 
50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி, முதல் பருவத்துக்கான புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

அதேபோல, 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை படிக்கும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு செட் இலவச சீருடையும் வழங்கப்படுகிறது. 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் 60 லட்சம் மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்படுகின்றன.

மாணவர்களுக்கு இந்தப் பொருள்கள் எந்தவிதப் பிரச்னையும் இன்றி விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்வதற்காக அந்தந்த மாவட்டங்களில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.




2 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive