டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு உத்வேகம், ஊக்கம்
அளிக்கும் வகையில் பள்ளிச்சான்றிதழ் முதல் அடையாள அட்டை வரை அனைத்தையும்
ஆன் லைன் மூலம் (இணையதளம்) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர்
நரேந்திரமோடி தலைமையிலான அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி
வருகிறது. அந்த திட்டத்தின்கீழ் வரும் ஜூலை 1-ம் தேதி
இ-பாஸ்டா (ebasta) எனும் புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இந்த
திட்டத்தின் படி என்.சி.இ.ஆர்.டி.(NCERT) பாடநூல்கள் முதல் சில
மாநிலங்களின் மொழிப்பாட நூல்கள் வரை அனைத்தையும் ஆன்லைனில் இலவசமாக
பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை அரசு அறிவிக்க உள்ளது. இது குறித்து
மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி
ஒருவர் கூறுகையில், இ-பாஸ்டா திட்டம் என்பது பிரதமர் மோடியின்
கனவுத்திட்டங்களில் ஒன்றாகும். ஆதலால், இந்த திட்டத்தை செயல்படுத்துதல்,
நடைமுறைக்கு கொண்டுவருவதில் பிரதமர் அமைச்சகம் கண்காணிப்பை
தீவிரப்படுத்தியுள்ளது.
இதில் இ-பாஸ்டா ஆப்ஸ் மூலம், பள்ளிப்பாடநூல்களை இலவசமாக பதிவிறக்கம்
செய்யலாம். செயல்முறை தேர்வுக்கான வீடியோக்கள், பாடங்களுக்கான ஆடியோ
பைல்களையும் பதிவிறக்கம் செய்து செல்போன், டேப்ளட், கணினிகளில் சேமிக்க
முடியும். குறிப்பாக எதிர்காலத்தில் மாணவர்களின் புத்தகச்சுமையை பெருமளவு
இது குறைக்கும் என்றார். டிஜிலாக்கர் போர்டல் குறித்து அந்த அதிகாரி
கூறுகையில், ஆதார் எண் மற்றும் மொபைல் எண் உள்ள எவரும் டிஜி லாக்கர்
போர்டலில் உறுப்பினராக சேர்ந்து இதன் வசதியை பயன்படுத்தமுடியும். பள்ளி
சான்றிதழ் முதல், பான்கார்டு, வாக்காளர் அட்டை, என அனைத்து
சான்றிதழ்களையும் இந்த போர்டலில் பாதுகாக்க முடியும். மேலும், இதை எந்த
அரசு அலுவலகத்திற்கும் இ மெயில் மூலம் எளிதாக அனுப்பலாம். இந்த போர்டலில்
இணைந்தவர்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து அரசு சான்றிதழ்களும்
இந்த போர்டல் வழியாக பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் போலி சான்றிதழ்
உருவாவதை தடுக்க முடியும் என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...