பி.பி.எட்., எனப்படும் உடற்கல்வியியல் இரண்டு ஆண்டு
படிப்பில் புதிதாக யோகா, கராத்தே, ஜூடோ உள்ளிட்ட பாடங்கள்
சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பி.எட்., மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக எம்.எட்., படிக்க வேண்டும். யு.ஜி.சி., ம ற்றும் தேசிய கல்வியியல் ஆசிரியர் பயிற்சி
பல்கலை (என்.சி.டி.இ.,) இணைந்து பி.எட்., படிப்புக்கு புதிய விதிமுறைகளை
கொண்டு வந்துள்ளது.
அதன்படி, பி.எட்., எம்.எட்., படிப்புக்காலம் இனி
இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் பி.எட்., படிப்புக்கு 723
கல்லுாரிகள், உடற்கல்வியியல் படிப்பான 'பி.பி.எட்.,' படிப்புக்கு 19
கல்லுாரிகள், எம்.எட்.,க்கு 140 கல்லுாரிகள் அனுமதி பெற்றுள்ளன. இதற்கான
பாடத்திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. காரைக்குடி
அழகப்பா பல்கலை கட்டுப்பாட்டில்
உள்ள உடற்கல்வியியல், கல்வியியல் கல்லுாரிகள் இரண்டு ஆண்டு மாணவர்
சேர்க்கைக்கு அனுமதி பெற்றுள்ளன. உடற்கல்வியியல் கல்லுாரியில் பி.பி.எட்.,
படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 15. ஒரு யூனிட்டுக்கு 50
மாணவர்கள் வீதம், 2 யூனிட் மாணவர்கள் முதலாண்டில் சேர்க்கப்பட உள்ளனர். இதே
போல் 40 இடங்கள் உள்ள, எம்.பி.எட்., படிப்புக்குக்கும் விண்ணப்பங்கள்
பெறப்பட்டுள்ளன. நேர்முகத்தேர்வு வரும் 24-ம் தேதி துவங்கி மூன்று நாட்கள்
நடக்கிறது.
இப்படிப்பில்,கால்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, ஹாக்கி, வளைகோல்,
கூடைப்பந்து, தடகளம் ஆகிய விளையாட்டு மட்டும்முன்பு செய்முறை பயிற்சியாக
இருந்தது. கூடுதலாக யோகா, கராத்தே, ஜூடோ, சிலம்பம், மலையேறுதல் ஆகியவையும்
சேர்க்கப்பட்டுள்ளன. விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தவும் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...