Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அவரவர் வழக்குகள் பட்டியலை வழக்கறிஞர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் நவீன சேவைவிரைவில் அறிமுகம்

    வழக்கறிஞர்களுக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் பட்டி யலை எஸ்எம்எஸ்மூலம் அனுப்பும் நவீன வசதி தமிழகம் முழுவ தும் விரைவில் அறிமுகப்படுத்தப் படுகிறது. இதற்கான பணியை தேசிய தகவல் மையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது .
      நீதிமன்ற நடவடிக்கைகளில் தகவல் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது. எந்த வழக்கு, எந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது என்ற தகவலை சிறிய மற்றும் பெரிய எலெக்ட்ரானிக் திரையில் பார்க்க முடிகிறது. இந்த வசதி, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மட்டும் உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்றங்களுக்கு முன்பு 40 சிறிய எல்இடி எலெக்ட்ரானிக் திரைகள், அரசு வழக்கறிஞர்கள் அலுவலகம், குடும்பநல நீதிமன்றம், சிட்டி சிவில் நீதிமன்றம், மெட்ராஸ் பார் அசோசியேஷன், இணைப்புக் கட்டிடம், அம்பேத்கர் சிலை அருகில் ஆகிய 6 இடங்களில் பெரிய டிஸ்பிளே போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.மதுரை உயர் நீதிமன்ற கிளையில், நீதிமன்றங்களுக்கு முன்பு 16 சிறிய எலெக்ட்ரானிக் திரைகள், 4 முக்கிய இடங்களில் பெரிய டிஸ்பிளே போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இது வழக் கறிஞர்களுக்கு மட்டுமல்லாது, வழக்கு தொடர்ந்தவர்களுக்கும் வசதியாக உள்ளது.சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஆகிய இடங்களில் விரைவில் டிஸ்பிளே போர்டு வைக்கப்படவுள்ளது.
 
         சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும்போது அது ஏற்கப்பட்டதற்கான தகவல், சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகிறது. மனுவில் கையெழுத்து சரியாக இல்லா விட்டாலோ, முத்திரைத்தாள் சரியாக ஒட்டாவிட்டாலோ அதை சரிசெய்யும்படியும் எஸ்எம்எஸ் அனுப்பப்படும். தீர்ப்பு நகல் தயாராகிவிட்டாலும் எஸ்எம்எஸ் வரும். வழக்கறிஞர் இல்லாமல் தாமாக ஆஜராகுபவர்களுக்கும் இந்த எஸ்எம்எஸ்கள் அனுப்பப்படுகின்றன.நீதிமன்ற அமர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் தயாராகும் வழக்குகள் பட்டியல் (Cause List) தேவை என்று பதிவு செய்கிற வழக்கறிஞர்களின் வீட்டுக்கு தினசரி நாளிதழ்போல வழக்குகள் பட்டியல் அதிகாலையிலேயே அனுப்பப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்திலும் இதை பார்க்கலாம். அனைத்து வழக்கு விவரங்கள் கொண்ட மொத்த பட்டியலாகத்தான் அது இருக்கும். அதில், தங்களுக்கான வழக்குகளை வழக்கறிஞர்கள் தேடிப் பார்த்து குறித்துவைத்துக் கொள்ள வேண்டும்.இந்நிலையில், வழக்கறிஞர் களுக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் பட்டியலை மட்டும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் நவீன வசதி தமிழகம் முழுவதும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான பணியை தேசிய தகவல் மையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு வசதியாக, தமிழகத்தில் உள்ள 988 கீழமை நீதிமன்றங்களில் வக்காலத்து தாக்கல் செய்யும் போதே செல்போன் எண்ணைக் கொடுக்க வேண்டியது கட்டாயமாக் கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்ற நிர்வாகஅதிகாரிகள் கூறினர்.
நடைமுறைச் சிக்கல்
நீதிபதி திடீரென விடுப்பு எடுக்கிறார் என்றால், இதுபற்றிய தகவல் காலையில் 10 மணிக்குதான் தெரியவருகிறது. அந்த வழக்கு கள் வேறு நீதிமன்றத்தில் விசாரிக் கப்படும் என்றோ, வேறு தேதியில் விசாரிக்கப்படும் என்றோ அப்போதுதான் அறிவிக்கப்படும். இதனால், காலையில் இருந்த காத் திருக்கும் வழக்காடிகள், வழக்கறி ஞர்கள், வெளியூரில் இருந்து வருப வர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கீழமை நீதிமன்றங்களிலும் இந்த நிலை உள்ளது.இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்று சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகத் தரப்பில் கேட்டபோது அதிகாரிகள் கூறியதாவது:வழக்குகள் பட்டியல் முந்தைய நாள் இரவு 7 மணிக்கு தயாராகும். நீதிபதிகள் விடுப்பு என்பது அதற்குள் தெரிந்தால், அதற்கேற்ப வேறு நீதிபதிகளுக்கு வழக்குகளை மாற்றி பட்டியல் தயாரிக்கப்படும்.
பட்டியல் தயாரான பிறகு, நீதிபதி விடுப்பு எடுத்தால், இத்தகவல் தலைமை நீதிபதிக்கு கொண்டுசெல் லப்பட்டு, அவர்தான் வேறு நீதிபதிக்கு மாற்றுவார். இதுபோன்ற நடைமுறைச் சிக்கல் காரணமா கவே, நீதிபதிகளின் திடீர் விடுப்பு பற்றி உடனே தெரிவிக்க முடிவ தில்லை. ஆனாலும், முடிந்தவரை இப்பணிகளையும் விரைவாக முடித்து, வழக்கு விவரங்களை பேப்பரில் எழுதி அந்த நீதிமன்றத்தில் ஒட்டிவிடுகிறோம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive