கோடையில் இனி மின்வெட்டுக்கு பஞ்சமிருக்காது
என மனம் பதறும் வேளையில் எளிய விலைகுறைந்த யு.பி.எஸ்.,
கண்டுபிடித்துள்ளனர் மதுரை பாத்திமா மைக்கேல் பொறியியல் மற்றும்
தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள்.
கண்டுபிடிப்பு குறித்து மாணவர்கள் கூறியதாவது:தானியங்கிகளில்
பயன்படும் மின்கலம் மின்விசிறி, எல்.இ.டி., பல்பு மற்றும் தானியங்கி
சாதனங்களை பயன்படுத்தி யு.பி.எஸ்., சாதனத்தை தயாரித்துள்ளனர். இதன் விலை
ரூ.5000லிருந்து என தற்காலிகமாக திட்டமிட்டுள்ளனர். சிறிய குடும்பத்திற்கான
ஒரு மின்விசிறி, மூன்று பல்புகளை இந்த மின்கலம் மூலம் தொடர்ந்து ஆறுமணி
நேரம் இயங்கச் செய்யலாம். இதன் ஆயுள் மூன்றாண்டுகள். தானியங்கி பாகங்களை
பயன்படுத்தி சொந்தமாக தயாரிக்கலாம்.
இதன் உதிரி பாகங்கள் எளிதாக குறைந்த
விலையில் கிடைக்கும். மிகவும் பாதுகாப்பானது. மொத்தமாக உற்பத்தி செய்யும்
போது விலை இன்னும் குறையலாம் என்றனர்.மின்கலம் தயாரித்த மாணவர்களை கல்விக்
குழுமத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், முதல்வர் நெல்சன் ராஜா பாராட்டினர்
என்றார். மாணவர்களை பாராட்ட 99429 82433.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...