சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சார்லஸ், மேரி பத்மஜா தம்பதிகளின் மகள் என்.எல்.பினோ செடின். (வயது 24) பார்வையிழந்த பெண். இவர்
பார்வையிழந்தோருக்கான சிறுமலர் பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்தார்.
பின்னர்
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பி.ஏ, ஆங்கிலமும், லயோலா கல்லூரியில் எம்.ஏ,
படித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு 2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக
ஆவதற்காக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். இதில் அகில இந்திய அளவில் 343
ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து பெனோ செடின் கூறியதாவது:-
அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பிரைல் புத்தகங்களை படித்து தேர்வு
எழுதினேன். தேர்வுக்கு பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள்
பொன்.ராதாகிருஷ்ணனன், சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, ஜிதேந்திரசிங்
மற்றும் சுப்பிரமணிய சுவாமி, ஆடிட்டர் குருமூர்த்தி, வானதி ஸ்ரீனிவாசன்,
பூமிநாதன், கோபால் செட்டி எம்.பி, மேகாலயா கவர்னர் சண்முகநாதன்,
ஸ்ரீனிவாசன், ரவிகுமார் உள்ளிட்ட பிரமுகர்கள், நண்பர்கள் ஐ.ஏ.எஸ்,
அதிகாரிகள் பலர் உதவி செய்தனர். பார்வையற்றவருக்கு ஐ.எப்.எஸ், பணி
வழங்குவது நாட்டிலேயே இது முதல் முறையாகும். எனக்கு வழங்கப்படும் பணியை
சிறப்பாக செய்து முடிப்பதே என்னுடைய லட்சியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...