அனைத்திந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (AIPMT) முடிவுகள் ஜூன் 12-ம் தேதி வெளியாகும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் சேர சிபிஎஸ்இ AIPMT-2015 நுழைவுத்தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது. அந்த வகையில், இந்தாண்டு நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வின் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மே 3-ம் தேதி சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு
நுழைவுத்தேர்வு முடிவுகள் செல்போன் மூலம் வெளியிட்டதாக புகார் எழுந்தது.
அதன்படி தேர்வு முடிவுகள் வெளியிடுவதை தற்போதைக்கு நிறுத்தி வைக்குமாறு
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், மத்திய மேல்நிலைக் கல்வி
வாரியம் தேர்வு முடிவுகள் வெளியிடவில்லை.
மேலும், தேர்வு முடிவுகள் வெளியிட்ட குற்றத்திற்காக, 12 பேர் மற்றும் 25
மாணவர்களை சமீபத்தில் ஹரியானா போலீசார் கைது செய்தனர். இறுதியாக, AIMPT
நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் 12-ம் தேதி வெளியிடப்படும் என்று சிபிஸ்இ
அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில்
AIPMT போட்டித் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...