உலக அளவில் கொடுமையான வறுமையில் வாழும் மக்களில் கால்வாசி பேர், 8 இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முன்முயற்சி திட்டம் நடத்திய ஆய்வில் பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில் வாழும் சுமார் 440 மில்லியன் மக்கள் கொடுமையான வறுமையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. மொத்தமாக உலகில் 1.6 பில்லியன் மக்கள் வறுமையில் வாடுவதாகவும், இது 25 ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் தொகைக்கு சமமானது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் இயக்குநர் சபீனா அல்கிரே கூறும் போது ”இந்தியாவில் வறுமையில் வாழும் மக்களை பற்றி மேலே சொன்ன தகவல் 2005-2006 ஆண்டில் வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையிலானது. இந்தியா போன்ற நாட்டில் வறுமையில் வாழும் மக்கள் பற்றி சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. மற்ற ஆசிய நாடுகளில் 2009, 2011 மற்றும் 2013-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது” என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...