அண்ணா பல்கலையில், இந்த ஆண்டு, பி.இ., - பி.டெக்., படிப்புக்கு
விண்ணப்பித்துள்ள, 1.54 லட்சம் பேரில், 80 ஆயிரம் பேர், முதல் தலைமுறை
பட்டதாரியாக ஆகப்போவதாக குறிப்பிட்டு உள்ளனர்.மொத்த விண்ணப்பதாரர்களில்,
மாணவர்கள், 95,300 பேர்; மாணவியர், 58,938 பேர்;
இதில், கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில், 1.51 லட்சம்
பேர்; தொழிற்கல்வி பிரிவில், 3,104 பேர் இடம்பெற்று உள்ளனர். விளையாட்டுப்
பிரிவில், 1,472 மாணவர், 595 மாணவியர் என, 2,067 பேர்;
மாற்றுத்திறனாளிகளில், 246 மாணவர், 102 மாணவியர் என, 348 பேர்; முன்னாள்
ராணுவ வீரர் குடும்பத்தினரில், 1,213 மாணவர், 902 மாணவியர் என, 2,115 பேர்
விண்ணப்பித்து உள்ளனர். இந்த, மூன்று சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுகளில்,
4,530 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில், முன்னாள்
ராணுவ வீரர் பிரிவில், 150 இடங்கள்; மாற்றுத்திறனாளிகள், 3 சதவீதம்;
விளையாட்டுப் பிரிவினருக்கு, 500 இடங்கள் ஒதுக்கப்படும்.
மொத்தமுள்ள விண்ணப்பங்களில், 52 சதவீதம் அளவுக்கு, 80,446 பேர், தங்களை
முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகப்போவதாக குறிப்பிட்டு உள்ளனர்; இவர்களில்,
மாணவர், 52,197 பேர்; மாணவியர், 28,249 பேர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...