திருச்சி ஜீயபுரம் அருகேயுள்ள தனியார் உயர்
நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளரின் காரில் மாணவியின் பெயர்
கிறுக்கப்பட்டிருந்ததால், பள்ளி நிர்வாகம் 150 மாணவ, மாணவிகளை
முழங்காலிட்டு பலமணி நேரம் நிற்கவைத்தனர். இதை கண்டித்து 80 மாணவ, மாணவிகள்
மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொண்டு வெளியேறினர்.
ஜீயபுரம் அருகேயுள்ள தனியார் உயர்நிலைப்
பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
அண்மையில் இந்தப் பள்ளி வளாகத்தில் நின்ற பள்ளித் தாளாளரின் காரில் 5-ம்
வகுப்பு மாணவி ஒருவரின் பெயர் இரும்புக் கம்பியால் எழுதப்பட்டிருந்தது.
உடனே, பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள்
அந்த மாணவியை கண்டித்துள்ளனர். அதற்கு அந்த மாணவி நான் பெயரை எழுதவில்லை
என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள், 5-ம் வகுப்பு
முதல் 7-ம் வகுப்பு வரை அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ,
மாணவிகளையும் முழங்காலிட்டு பல மணி நேரம் நிற்க வைத்துள்ளனர்.
இதனால் வலியால் துடித்த மாணவ, மாணவிகள்,
வீட்டுக்கு சென்றதும் நடந்ததை தங்களது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் பள்ளியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு,
ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை 80 மாணவ,
மாணவிகளின் பெற்றோர் பள்ளியிலிருந்து தங்களது பிள்ளைகளின் மாற்றுச்
சான்றிதழை (டிசி) வாங்கிச் சென்று வேறு பள்ளிகளில் சேர்க்கும்
நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...