மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வில், நடைபெற்ற முறைகேடு
வழக்கை, விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட், நேற்று மீண்டும் தீர்ப்பை ஒத்தி
வைத்தது. இதனால், தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருந்த, 6.3 லட்சம் மாணவர்கள்
செய்வதறியாது திகைக்கின்றனர்.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக, கடந்த மே 3ம் தேதி, நாடு முழுவதும்
நடைபெற்ற, அனைத்திந்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. அரியானாவில், ஒரு தேர்வு மையத்தில், ரகசிய ஒட்டுக்கேட்பு
கருவிகள் மூலம், வெளியிடங்களில் இருந்து பதில்களை கேட்டு தேர்வு எழுதிய, 44
மாணவர்கள் சிக்கினர்.
இதையடுத்து, இந்த விவகாரம், சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. தேர்வை
நடத்திய, சி.பி.எஸ்.இ., கல்வி நிறுவனத்திடம், 'நுழைவுத்தேர்வு முடிவை
வெளியிடக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.ஜூன் 5ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்கள் அந்தந்த
மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், மத்திய அரசின் ஒதுக்கீட்டு
இடங்களில் சேர இருந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவால், மாணவர்
சேர்க்கை தாமதமாகி வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை, கடந்த 8ம் தேதி நடைபெற்ற போது, '12ம் தேதி தீர்ப்பு
வழங்கப்படும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்; ஆனால், நேற்றும்
தீர்ப்பு கூறப்படாமல், ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, நீதிபதிகள் கூறியதாவது:இது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த
வழக்கு; மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட வழக்கு. முறைகேடான
விதங்களில் ஒரு மாணவர் கூட, மருத்துவம் படிக்க அனுமதிக்கப்படக் கூடாது
என்பது தான், கோர்ட்டின் விருப்பம்.
ஒத்தி வைப்பு:
தேர்வை மறுபடியும் நடத்துவது தான், சரியான முடிவாக இருக்கும்; எனினும்,
அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டோம். முறைகேடு நடைபெற்ற
அரியானாவில், விசாரணை நடைபெறுகிறது; அது முடியும் வரை, தீர்ப்பு
ஒத்திவைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி ஆர்.கே.அகர்வால் தலைமையிலான அமர்வு,
நேற்று உத்தரவிட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...