சி.பி.எஸ்.இ. சார்பில் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தகுதித்
தேர்வு முடிவுகள் வருகிற 5 அல்லது 6-ஆம் தேதி வெளியிடப்படும் என
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக,
கல்லூரி உதவிப் பேராசிரியர் பதவிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின்
இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பர்
மாதங்களில் தேசிய அளவிலான தகுதித் தேர்வு "நெட்' நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வை யுஜிசி நடத்தி வந்தது. கடந்த 2014 டிசம்பர் மாதம் முதல் இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பை சி.பி.எஸ்.இ. வசம் யுஜிசி ஒப்படைத்தது.
அதன்படி, டிசம்பர் மாதத் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தியது. ஆனால் தேர்வு முடிவை இதுவரை வெளியிடவில்லை.இந்தத் தேர்வை யுஜிசி நடத்தி வந்தது. கடந்த 2014 டிசம்பர் மாதம் முதல் இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பை சி.பி.எஸ்.இ. வசம் யுஜிசி ஒப்படைத்தது.
இந்த நிலையில் 2015 ஜூன் மாத "நெட்' தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டதால், இதற்கு மீண்டும் விண்ணப்பிப்பதா அல்லது டிசம்பர் மாதத் தேர்விலேயே தகுதி பெற்றிருப்போமா என்ற குழப்பம் முந்தைய தேர்வர்களிடையே எழுந்தது.
ஆனால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையிலும், இதுவரை முந்தைய தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
யுஜிசி, சி.பி.எஸ்.இ. இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடே தேர்வு முடிவுகள் வெளியிடாததற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ஜூன் மாதத் தேர்வானது வருகிற 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முன்பாவது முந்தைய தேர்வு முடிவுகள் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு தேர்வர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில், தேர்வு முடிவு வெளியிடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் தொலைபேசி மூலம் அளித்த பேட்டி:
2014 டிசம்பர் மாத "நெட்' தேர்வு முடிவு வெளியிடுவதில் நீடித்து வந்த சிக்கலுக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது.
முடிவுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு யுஜிசி அதிகாரிகள் உதவி வருகின்றனர்.
எனவே வருகிற ஜூன் 5 அல்லது 6-ஆம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டு விடும்.
அடுத்தடுத்து வரும் "நெட்' தேர்வுகள், அவற்றுக்கான முடிவுகளையும் சி.பி.எஸ்.இ.-தான் வெளியிடும் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...