இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் மாணவ, மாணவி களுக்கு அவர்களின் அன்றாட பாடங்களுடன் நீதி போதனை (Moral Instruction) என்ற சிறப்பு வகுப்பும் இருந்தது.
வாரத்தில் ஒருநாள் நீதி போதனை வகுப்பு நடத்தப்படும். இதில் கதைகள் மற்றும் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் மூலமாக நல்ல பழக்க வழக்கங்கள், பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்தல், கீழ்ப்படிதல், நீதி, நேர்மை, உண்மை குறித்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். இத்தகைய சூழலில், வகுப் பில் தங்களை அடிக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் திருப்பி அடிப்பது (சென்னை யில் ஒரு ஆசிரியை மாணவ ரால் கத்தியால் குத்திக் கொல் லப்பட்ட சம்பவமும் நடந்தது), வகுப்பில் பாடம் நடத்துகிற ஆசிரியர்களைக் கேலி செய் வது, குடித்துவிட்டு பள்ளிச் சீருடையில் தெருவோரம் போதையில் மயங்கிக்கிடப்பது போன்ற சம்பவங்களும் அவ்வப் போது நடக்கத் தொடங்கின. இதுபோன்ற நிலையை மாற்ற, பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் மீண்டும் நீதி போதனை வகுப்பை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.
மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது: இந்த ஆண்டிலிருந்து 6 முதல் 10-ம் வகுப்பு வரையில் நீதி போதனை வகுப்பு அதா வது நல்லொழுக்கக் கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 6 முதல் 8-ம் வகுப்பு வரை நடைமுறைப் படுத்தப்படும். வாரத்தில் ஒருநாள் கட்டாயம் நீதி போதனை வகுப்பு இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்தல், பெரியோரை மதித் தல், கீழ்ப்படிதல், உண்மை, நீதி, நியாயம், நேர்மை, நாட்டுப் பற்று, நட்புறவு, குழுஉணர்வு என 60 விதமான மதிப்பீடுகள், அன்றாடம் நிகழும் மனதை தொடுகின்ற உண்மைச் சம்பவங் கள் மற்றும் சிறு கதைகள், எடுத்துக்காட்டுகள் மூலம் மாண வர்களுக்கு எடுத்துரைக்கப்படும். பேருந்துகளில் வயதான வர்கள் வந்தால் அவர்களுக்கு எழுந்து இடம் கொடுப்பது பற்றிக்கூட சொல்லிக் கொடுக் கப்படும். அறிவுரை வழங்கு வதுபோன்று இல்லாமல் மாணவர்கள் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் கேட்கும் வகையில் வகுப்பு அமைந் திருக்கும். அவர்களின் பாடப் புத்தகத்தில் இடம்பெறும் விஷயங்களை அடிப்படை யாகக் கொண்டும் வகுப்புகள் நடத்தப்படும் என்பதால் படிப் புக்கும் பயனுள்ளாக இருக்கும். நீதி போதனை வகுப்புக்கென ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், நீதி போதனை வகுப்புக்காக சிறப்பு கையேடும் தயாரிக்கப்படும். 6, 7, 8-ம் வகுப்புகளைத் தொடர்ந்து, 2-வது கட்டமாக 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு அறிமுகப்படுத்தப்படும். அவர்களுக்கு நேர்மறை சிந்தனை, மதுவின் தீமைகள், போதை பழக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வது என்பன உள்பட பல்வேறு விஷயங்கள் சொல்லிக் கொடுக்கப்படும். இவ்வாறு ராமேஸ்வர முருகன் கூறினார்.
நீதி போதனை வகுப்பு கண்டிப்பாக தேவை. மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் போதித்தல் மிக அவசியம்.
ReplyDeleteNallavisayam varunglathil ariviyalum arasiyalum migavum sirapaga irukum valga baratham
ReplyDeleteits very late... anyway good decision...
ReplyDeleteindha arivu ippadha vandhucha...
ReplyDeletefirst teachers need moral value classes
ReplyDeleteநல்ல விஷயம் ....
ReplyDeleteஆனால் "காவி வாசனை " இல்லாதிருத்தல் வேண்டும் .. . அப்படி சேர்க்கப்படும் பட்சத்தில் மற்ற மதங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும்.........