கோவை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு மற்றும் இணைப்பு
கல்லூரிகளில் 13 பட்டப்படிப்புகள் உள்ளன. 2015-16ம் கல்வியாண்டின் இளங்கலை
வேளாண்மை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.
இதில் சிறப்பு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.விளையாட்டு பிரிவு
மாணவர்களுக்கு 5 இடம், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு 8 இடங்கள்,
மாற்றுத்திறனாளிகளுக்கு 18 இடம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்
வாரிசுகளுக்கு ஒரு இடம் என மொத்தம் 32 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்த பிரிவில் கலந்துகொள்ள 52 பேர் அழைக்கப்பட்டனர். கலந்தாய்வில் 32 இடங்கள் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டன. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை துவங்குகிறது. 7ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. 2வது கட்ட கலந்தாய்வு ஜூலை 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. ஜூலை 27ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...