மதுரை, கோவையில் நடந்த பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் பணிகள் நிறைவுற்றது.பிளஸ்
2 தேர்வு முடிவுகள் வெளியான பின் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண்
சான்றுகள் வழங்கப்பட்டன. இதன்பின் மே 8 முதல் மறுகூட்டல் மற்றும்
விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சம் விண்ணப்பங்கள் தேர்வுத்துறைக்கு
வரப்பெற்றன.சென்னையை
தவிர்த்து இந்தாண்டு முதன்முறையாக மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்காக மதுரை
மற்றும் கோவையில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இதற்கு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய (எஸ்.சி.இ.ஆர்.டி.,)
இணை இயக்குனர் அமுதவல்லி தலைமையில் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும்
ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். இப்பணிகள் 7 ம் தேதி முடிவுற்றது.இதுகுறித்து
அமுதவல்லி கூறுகையில், "மதுரை, கோவையில் அனுபவம் மற்றும் திறமையான
ஆசிரியர்கள் இருந்ததால் முதன்முறையாக இந்தாண்டு இரு மாவட்டங்களிலும்
மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இப்பணியின்போது ஒவ்வொரு தாளும் மூன்று
ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டது. 5 ஆயிரம் விடைத்தாள்
மறுமதிப்பீடும், 4 ஆயிரம் விடைத்தாள் மறுகூட்டல் பணி நிறைவடைந்துள்ளன.
இவற்றின் விவரம் தேர்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...