Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு கப்பற்படையில் இலவச பி.டெக் படிப்புடன் பணி

     இந்திய கப்பற்படையில் இலவச நான்கு வருட பி.டெக் படிப்புடன் பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கான 10+2 (B.Tech) Cadet Entry Scheme-ல் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 முடித்த திருமணமாகாத ஆண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
       தேர்வு செய்யப்படுவர்களுக்கு கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்திய கப்பற்படை அகாடமியில் 2016 ஜனவரி மாதம் பயிற்சி ஆரம்பமாகும்.
ஆள்சேர்ப்பு திட்டத்தின் பெயர்: 10+2 (10+2 (B.Tech) Cadet Entry Scheme
வயதுவரம்பு: 17-191/2-க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1996 - 01.01.1999க்கும் இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், கணிதப் பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2-வில் ஆங்கில பாடத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
தேர்வு 2015 ஆகஸ்ட்-நவம்பர் மாதங்களில் இடைப்பட்ட காலத்தில் நடைபெறும்.
தேர்வு மையங்கள்: கோயம்புத்தூர், விசாகப்பட்டினம், பெங்களூர், போபால் ஆகிய இடங்களில் நடைபெறும். தேர்வு இரண்டு கட்டங்களாக மொத்தம் 5 நாட்கள் நடைபெரும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு பதிவு எண் அடங்கிய ஆன்லைன் படிவத்தின் 2 நகல்களை பிரிண்ட் அவுட் எடுத்து, ஒன்றில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து சாதாரண அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ் நகல்கள் சென்று சேர கடைசி தேதி: 23.06.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Post Box No.4,
Nirman Bhawan PO.,
RK Puram, New Delhi-110011.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive