குரூப்-2
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? இல்லையா?
என்பதை ஆன்லைனில் தெரிந்துகொள்ள டிஎன்பிஎஸ்சி ஏற்பாடு செய்துள்ளது.
துணை வணிகவரி
அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர்
ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி
செயல் அதிகாரி (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளில் 1,241 காலியிடங்களை
நிரப்புவதற்காக ஜூலை 26-ந் தேதி குரூப்-2 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு 6
லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த
நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா?
இல்லையா? என்பதை ஆன்லைனில் தெரிந்துகொள்ள டிஎன்பிஎஸ்சி ஏற்பாடு
செய்துள்ளது.
அதன்படி,
விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண்ணை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில்
(www.tnpsc.gov.in) பதிவுசெய்து விண்ணப்ப நிலையை அறிந்துகொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...