பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தேர்வுக் கூட
நுழைவுச்சீட்டை நாளை (திங்கள்கிழமை) முதல் பதி விறக்கம் செய்துகொள்ளலாம்
என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் டூ
தேர்வுக்கு தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் உள்பட அனைத்து
தனித்தேர்வர்களும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை நாளை (திங்கள்கிழமை) முதல்
இணையதளத்தில் (www.tndge. in) பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். இணையதளத்தின்
பக்கத்தில் Higher Secondary Exam June/July 2015 - Private Candidate -
Hall Ticket Print out என்று தோன்றுவதை கிளிக் செய்து மார்ச் தேர்வு
பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும். தேர்வுக்கூட
அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட
மாட்டார்கள்.
எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறை அடங் கிய
பாடங்களில் செய்முறைத்தேர்வில் 40 மதிப் பெண்ணுக்கு குறைவாகப் பெற்று
தேர்ச்சி அடையாதவர் கள் கண்டிப்பாக அத்தேர் வினை மீண்டும் செய்ய வேண்டும்.
அத்துடன் எழுதுத் துத்தேர்வையும் எழுத வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200
கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்
முறைத்தேர்வு செய்ய வேண்டும்.
மொழிப்பாடங்களில் கேட்டல், பேசுதல், திறன்
தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்), பாடத்தில் கேட்டல், பேசுதல், திறன் தேர்வு
மற்றும் செய்முறைத்தேர்வுக்கான தேதி விவரங்களை தனித்தேர்வர்கள் தாங்கள்
தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள
வேண்டும்.
இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...