Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இளநிலை ஆராய்ச்சியாளர் தகுதித் தேர்வு:காரைக்குடியில் ஜூன் 21ல் நடக்கிறது

      இளநிலை ஆராய்ச்சியாளர்,விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு, வரும் 21ம் தேதி காரைக்குடியில் 'சிக்ரி' சார்பில் அமைக்கப்பட்டுள்ள 9 மையங்களில் நடக்கிறது.

         எம்.எஸ்சி., (கணிதம், அறிவியல்) பி.இ., முடித்த வர்கள் சி.எஸ்.ஐ.ஆர்., யு.ஜி.சி., சார்பில் நடத்தப்படும், இளநிலை ஆராய்ச்சியாளர், விரிவுரையாளர் தேர்வில் வெற்றி பெற்றால், அவர்களின் தொடர் ஆராய்ச்சிக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்கான தகுதி தேர்வுதமிழகத்தில் சென்னை, காரைக்குடி ஆகிய இரு இடங்களில், வரும் 21-ம் தேதி நடக்கிறது. காரைக்குடியில் நடக்கும் தேர்வுக்கு, கடந்த ஆண்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இவ்வாண்டு, 4,100 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் 13 மையங்கள் 9-ஆக குறைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி மையத்தில் சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.

'சிக்ரி' மைய தேர்வு ஒருங்கிணைப்பாளர் மோகன் கூறியதாவது: தேர்வுக்கு பதிவு செய்தவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். 'ஹால் டிக்கெட்டை' விண்ணப்பதாரர்கள் www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தபாலில் அனுப்பப்பட மாட்டாது. நுழைவு சீட்டில் போட்டோ இல்லை எனில், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, போட்டோ அடையாள சான்றாக பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும். கருப்பு பால் பாயிண்ட் பேனா எடுத்து வர வேண்டும்.

ஜூன் 21-ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை, உயிர் அறிவியல், புவி வானவியல் கடல் மற்றும் கோளவியல் அறிவியல், கணித அறிவியல் பாடங்களுக்கான தேர்வும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை, வேதி அறிவியல், இயற்பியல் அறிவியல், பொறியியல் அறிவியல் பாடத்திற்கான தேர்வும் நடைபெறும்.

தேர்வு மையத்தில் நகல் நுழைவு சீட்டு வழங்கப்படமாட்டாது. தேர்வு மையத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்னதாக வரவேண்டும். விபரங்களுக்கு 94421 26765, 04565 241 474, 94436 09776 என்ற எண்ணிலும், mohan40159@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive