பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மறு கூட்டல், தேர்வுத் தாள் மறு
மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில் 3,478 பேரின் மதிப்பெண்களில் மாற்றம்
ஏற்பட்டிருப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.
மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய
தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 16-ஆம் தேதி இணையதளத்திலிருந்து
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி: 2015
மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 260
பேர் எழுதினர்.
இவர்களில் மதிப்பெண் மறு கூட்டல், விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சத்து 566 பேர் விண்ணப்பித்தனர்.
அவர்களில் மதிப்பெண் மறு கூட்டலுக்கு 2,835 பேர், தேர்வுத்தாள் மறு
மதிப்பீடுக்கு 3,502 பேர் என மொத்தம் 6,337 பேர் விண்ணப்பித்தனர்.
இதில் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில் 2,782 பேரின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் 696 பேரின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஜூன் 16-இல் மதிப்பெண் மாற்றம் தெரியும்: மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின்
பதிவெண் பட்டியல் வரும் 15-ஆம் தேதி மாலை 4 மணிக்கு
ள்ஸ்ரீஹய்.ற்ய்க்ஞ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மதிப்பெண்
மாற்றம் இல்லாத பதிவெண்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்காது.
மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் வரும் 16-ஆம் தேதி காலை 10 மணி முதல்
ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தேர்வுப் பதிவெண்,
பிறந்த தேதி விவரங்களைப் பதிவு செய்து, திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய
தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.டி. ஒப்படைப்பு: மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் மதிப்பெண்கள்
அடங்கிய சி.டி.-யை, எம்.பி.பி.எஸ், பி.இ. தரவரிசைப் பட்டியல் தயாரிக்க
வசதியாக, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடமும்,
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் குழுவிடமும் அரசுத் தேர்வுகள்
துறையினர் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...