தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன் கணவர் விபத்தில் இறந்ததால்,
கூடுதல் இழப்பீடு தொகை தரவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மல்லிகா
என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்
விசாரித்தார்.
வழக்கு விசாரணையின் முடிவில், ''ரூ.20 லட்சம் இழப்பீடு தொகை தரவேண்டும். ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிம அட்டையை பறிமுதல் செய்யலாம்.
ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை
போன்ற இடங்களில் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்'' என்று நீதிபதி
கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...