அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின், 30 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' கூட்டுக்குழுவை அமைத்து உள்ளன. இக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்; 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்தல் உள்ளிட்ட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஜாக்டோ உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம், தமிழக ஆரம்பப் பள்ளிஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் தாஸ் தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது. ஆலோசனை முடிவில், மீண்டும் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்புவது என்றும், அரசு அழைத்துப் பேசாவிட்டால், ஆக., 1ம் தேதி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
CPS KU ORU MUDUVU PANNAUNGA SIR
ReplyDelete