ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற மின்னணு பரிமாற்ற முறைகளில் மட்டுமே மேற்கொள்ளும் வகையில் கட்டுப்பாடு கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
வங்கிக் கணக்கு மூலமாக மின்னணு பரிமாற்றத்தை அதிகரிக்கவும் நிதி அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக டெல்லியில் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால், ரொக்கமாக பணம் கைமாறுவதால் ஏற்படும் கருப்புப் பண நடமாட்டத்தைத் தவிர்க்க முடியும் என்று அரசு நம்புவதாகவும் நிதியமைச்சக உயரதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை அதிகரிக்க வரிச்சலுகை போன்ற வசதிகளை அரசு அளிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. 2011 ஏப்ரல் நிலவரப்படி 23 கோடியாக இருந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகள், சென்ற ஏப்ரல் மாதத்தில் 56 கோடியாக, இரண்டு மடங்குக்கு மேல்உயர்ந்திருக்கிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...