மருத்துவ நுழைவு தேர்வு வினாத்தாள் லீக் ஆன வழக்கில் 15ம் தேதி தீர்ப்பு
புதுடில்லி: மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆன
வழக்கில், வரும் 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்
கூறியுள்ளது.
தேசிய முதல்நிலை மருத்துவ நுழைவு தேர்வு சில நாட்களுக்கு
முன்னர் நடந்தது. ஆனால் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் 10 மாநிலங்களில்
வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பலவற்றில் வெளியானது. இதனையடுத்து இந்த தேர்வை ரத்து
செய்யக்கோரியும், மீண்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தியும்
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று
நடந்தது. அப்போது, வரும் 15ம் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ள
சுப்ரீம் கோர்ட், அதுவரை தேர்வு முடிவை வெளியிடவும் தடை விதித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...