குன்னூரில் செயல்பட்டுவரும் அரசினர்
தொழிற்பயிற்சி நிலையத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக
பொருத்துநர், கடைசல், கம்மியர், மின்சாரப் பணியாளர் ஆகிய 2 ஆண்டு
படிப்புகளுக்கும், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக கம்பியாள்,
தச்சர், பற்ற வைப்பவர் படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு
வருகின்றன.
அதேபோல, கூடலூரில் உப்பட்டியிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்கள், ஜூன் 10-ஆம் தேதி வரை
விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப
செலுத்துவதற்கும் அன்றே கடைசி நாளாகும்.
மதிப்பெண் அடிப்படையிலும், அரசு
விதிகளின்படி கலந்தாய்வின் அடிப்படையிலும் பயிற்சியாளர்கள் தேர்வு
செய்யப்படுவர். இப்படிப்புகளுக்கான பயிற்சிக் கட்டணம் முற்றிலும்
இலவசமாகும். அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் வருகை நாள்களுக்கேற்ப அரசின்
உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் கட்டணமில்லாப் பேருந்து பயண வசதி,
விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, பாட புத்தகம், வரைபடக் கருவிகள்,
சீருடை, காலணி ஆகிய சலுகைகளையும் அரசு வழங்குகிறது.
மாநில கல்வித்திட்ட முறைப்படி எஸ்சிவிடி
தேர்வு எழுதுபவர்கள், தனித் தேர்வர்களாக மத்திய அரசின் என்சிவிடி
சான்றிதழுக்கான தேர்வெழுதவும் அனுமதிக்கப்படுவர். அத்துடன், பிரபல முன்னணி
தொழில் நிறுவனங்களின் மூலமாக வளாக நேர்காணல் நடத்தப்பட்டு
வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
இதுதொடர்பான, கூடுதல் விவரங்களை 0423-2231759 என்ற தொலைபேசி எண்ணில் பெற்றுக் கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...