''துணை கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட 74 குரூப் - 1 பதவிகளுக்கான புதிய
தேர்வு, இரு வாரங்களில் அறிவிக்கப்படும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்து
உள்ளார்.
தமிழகத்தில் சப் -- கலெக்டர் - 3; டி.எஸ்.பி., - 33; வணிகவரி உதவி ஆணையர் -
33; ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் - 10 ஆகிய 79 காலியிடங்களுக்கான
குரூப் -- 1 முதன்மை எழுத்துத்தேர்வு நேற்று துவங்கியது; நாளை வரை
இத்தேர்வு நடக்கிறது; இதில் 4,282 பேர் பதிவு செய்து பெரும்பாலானோர்
பங்கேற்றனர்.சென்னையில் 43 மையங்களில் ஒன்றான என்.கே.டி., மகளிர் பள்ளியில்
நடக்கும் தேர்வை டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம்
மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா ஆகியோர் திடீர் ஆய்வு
நடத்தினர்.
பின் பாலசுப்ரமணியம் அளித்த பேட்டி:இந்த தேர்வுக்கு பதிவு
செய்திருந்தவர்களில் 80 சதவீதம் பேர் வந்துள்ளனர். உயர் நீதிமன்ற
உத்தரவுப்படி மாற்றுத்திறனாளி தேர்வர் ரமேஷுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம்
தேர்வு எழுத சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.மற்ற மாற்றுத்திறனாளி
தேர்வர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் தரப்பட்டு உள்ளது; இந்தத்
தேர்வுக்கான முடிவுகள் இரு மாதங்களில் வெளியாகும்.
குரூப் - 1 பதவியில், காலியாக உள்ள துணை கலெக்டர் - 19; டி.எஸ்.பி., - 26;
வணிகவரி உதவி ஆணையர் - 21; மாவட்டப் பதிவாளர் - 8 ஆகிய 74
காலியிடங்களுக்கு, இரு வாரங்களில் தேர்வு அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...