த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்தியா
முழுவதும் 8.1 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமலும் அல்லது
பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். மேலும்
பள்ளிகளில்சுமார் 5 லட்சத்து 8 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக
இருக்கின்றார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டாயமாக கல்வி
பெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு 2009–ம் ஆண்டில் கல்வி உரிமை சட்டத்தை
மத்தியஅரசு கொண்டுவந்தது. அதன் அடிப்படையில் அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த
சட்டத்தைநடைமுறைப்படுத்த 1 லட்சத்து 71 ஆயிரம் கோடி நிதி தேவை எனக்
கணக்கிட்டுஇச்சட்டத்தை சர்வசிக்ச அபியான் எனும் திட்டத்தின் மூலம்
நடைமுறைப்படுத்ததொடங்கியது.சர்வசிக்ச அபியான் திட்டத்தின் அடிப்படையில்
2010–ம் ஆண்டு முதல் தமிழகத்தில்மட்டும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
இந்த ஆசிரியர்கள் அனைவரும் ஐந்தாண்டுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வான ‘‘டெட்’’ எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என மத்தியஅரசின் மனித வள மேம்பாட்டு துறை ஆணை பிறப்பித்தது.ஐந்தாண்டுகளில் 10 முறை இந்த டெட் தேர்வை எழுதலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தை பெறுத்த வரை கடந்த 2013–ம் ஆண்டுஒரு முறை மட்டுமே டெட் தேர்வு நடந்தது. 2011–ம் ஆண்டு பணியில் சேர்ந்தஆசிரியர்கள் அனைவருக்கும் இன்னும் ஒரு ஆண்டே தகுதித் தேர்வை நடத்திட வேண்டும்என்று ஆசிரியர்கள் அனைவரும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.அவ்வாறு இந்த தேர்வை நடத்தாமல் இருந்தால் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயச்சூழல் ஏற்படும்.
அதனால் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை,
எளியமாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும்.எனவே தமிழக அரசு ஏழை, எளிய
மாணவர்களின் கல்வியைக் கருத்தில் கொண்டும்,ஆசிரியர்களின் கோரிக்கைகளை
ஏற்றும் தகுதித் தேர்வை உடனே அறிவித்தது நடத்தவேண்டும்.சர்வசிக்ச அபியான்
திட்டம் தங்கு, தடையின்றி தொடரவும், மாணவர்கள் தொடர்ந்துகல்வி பயிலவும்,
ஆசிரியர்கள் நலன் காக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாகநடவடிக்கைகள்
மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...